சின்னப்பையன்.. சிஎஸ்கேவை மிரள வைத்த இளம் வீரர்.. ஆடிப்போன 3 ஜாம்பவான்கள்.. எப்படி சாத்தியம் ஆனது?
சென்னை: சிஎஸ்கே போட்டு வைத்து இருந்த திட்டங்களை எல்லாம் ராஜஸ்தான் அணியில் ஆடும் இளம் வீரர் சேட்டன் சக்கரியா மொத்தமாக அடித்து உடைத்து இருக்கிறார்கள்.
Recommended Video
நேற்று சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிதான் டாஸ் வென்றது. மும்பை பிட்சில் சேசிங் செய்வது எளிது என்பதால் ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு எடுத்தது. டாசில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஆனால் சிஎஸ்கேவோ முதல் பாலில் இருந்து அதிரடி காட்டி அதிக ரன்களை எடுக்க முயன்றது. அதிகமாக ஸ்கோர் செய்தால், கண்டிப்பாக டிபன்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருந்தது.

அதிரடி பேட்டிங்
இதனால்தான் டு பிளாசிஸ் தொடங்கி பிராவோ வரை எல்லோரும் நேற்று அதிரடியாக பேட்டிங் செய்தனர். விக்கெட் போனாலும் பிரச்சனை இல்லை. ரன் எடுப்பது முக்கியம் என்று ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். அம்பதி ராயுடுவும் கூட நேற்று மிடில் ஓவர்களில் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால் என்ன
ஆனால் மிடில் ஓவர்களில் ரெய்னா, தோனி மட்டும் கொஞ்சம் திணறினார்கள். சிஎஸ்கே அணி நேற்று முதல் 10 ஓவரில் ஆடிய வேகத்திலேயே ஆடி இருந்தால் 200 ரன்கள் எடுத்து இருக்கும். ஆனால் மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் பவுலர் சக்காரியா ஓவர் வீசிய விதம் மொத்தமாக சிஎஸ்கே அணியை நிலைகுலைய வைத்தது.

ராஜஸ்தான்
நேற்று ராஜஸ்தான் அணிக்கு சிறப்பாக பவுலிங் செய்த ஒரே வீரர் சக்காரியாதான். நேற்று இவர் வீசிய 14வது ஓவரில் அடுத்தடுத்து ராயுடு, ரெய்னா விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 18வது ஓவரில் தோனி விக்கெட்டை எடுத்தார். ரெய்னாவிற்கு ஷார்ட் பால், தோனிக்கு யார்க்கர், ராயுடுவிற்கு ஸ்லோ பால் என்று போட்டு நெருக்கடி கொடுத்தார் சக்காரியா. அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில் சிஎஸ்கேவின் சக்காரியாவின் 3 ஜாம்பவான்கள் விக்கெட்டை இவர்தான் எடுத்தது.

சிறப்பு
இந்த இரண்டு ஓவர்களால்தான் நேற்று மிடில் ஓவர்களில் ரன் செல்லாமல் விக்கெட்டுகள் விழுந்து சிஎஸ்கே கொஞ்சம் பின்னடைவை சந்தித்தது. சக்காரியாவின் பவுலிங்தான் நேற்று சிஎஸ்கேவிற்கு நெருக்கடி கொடுத்தது. நேற்று 4 ஓவர் வீசிய சக்காரியா வெறும் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இந்த தொடர் முழுக்க ராஜஸ்தான் அணிக்காக இவர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

நல்ல வீரர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சக்காரியா சவுராஷ்டிரா அணிக்காக ஆடி வந்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, அந்த அணியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் ராஜஸ்தானுக்கு மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களில் இவர்தான் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications