தப்புங்க.. "லைவிலேயே" பகிரங்கமாக பேசிய சாம்சன்.. கேப்டனையே எதிர்க்கும் வீரர்.. ராஜஸ்தானில் பிளவு?
மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்று போட்டிக்கு பின்பாக அளித்த பேட்டியில் சக வீரர் கிறிஸ் மோரிஸிடம் மன்னிப்பு கேட்பது போல பேசினார்.
Recommended Video
நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கிறிஸ் மோரிஸ் அதிரடியால் வெற்றிபெற்றது. கடைசி இரண்டு ஓவர்களில் 4 சிக்ஸர் அடித்து கிறிஸ் மோரிஸ் ராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த நிலையில் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்ததை பலரும் நினைவு கூறி வருகிறார்கள். அந்த போட்டியில் கடைசி ஓவரில் மோரிஸுக்கு சஞ்சு சாம்சன் ஸ்டிரைக் கொடுக்காமல் சென்றதை விமர்சித்து வருகிறார்கள்.

விமர்சனம்
பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடியாமல் சஞ்சு சாம்சன் அவுட் ஆவார். இதனால் ராஜஸ்தான் அணியும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஒருவேளை அன்று மோரிஸுக்கு சஞ்சு சாம்சன் பேட்டிங் கொடுத்து இருந்தால் ராஜஸ்தான் வென்று இருக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

பதிலடி
இந்த நிலையில் சஞ்சு சாம்சனும் இதை பற்றி பேசியுள்ளார். அதில், நான் அந்த போட்டியில் மோரிஸுக்கு ஸ்டிரைக் கொடுக்கவில்லை. நான் செய்தது தவறு என்று சொல்ல மாட்டேன். நான் என் ஆட்டத்தை பார்த்தேன். 100 போட்டிகள் இனி நடந்தாலும் சிங்கிள் எடுக்க மாட்டேன்.

சிங்கிள்
இனி வரும் போட்டிகளிலும் நான் கண்டிப்பாக சிங்கிள் எடுக்க மாட்டேன். இன்று மோரிஸ் சிறப்பாக ஆடினார். அவரின் ஆட்டம் தன்னம்பிக்கையோடு இருந்தது, என்று சஞ்சு சாம்சன் குறிப்பிட்டார்.

பதில்
இதற்கு பதில் அளித்த மோரிஸ் சஞ்சு சாம்சன் செய்தது தவறு என்பது போல பேசினார், நான் எப்போதும் சஞ்சு சாம்சனை நம்புகிறேன். என் கேப்டன் சொல்வதை நான் கேட்பேன். அன்று சஞ்சு ரன் ஓடி இருந்தால் நானும் ஓடி இருப்பேன். ஆனால் அவர் அடுத்த போட்டியில் இன்னும் கொஞ்சம் தள்ளி அடிப்பார், அது சிக்ஸ் போகும் என்று நம்புகிறேன், என்று கிறிஸ் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications