
அவுட்
இதில் உனட்கட் சிறப்பாக ஆடி 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியும் ராஜஸ்தான் போலவே மோசமாக ஆடியது. டெல்லி அணியின் ஓப்பனிங் வீரர்களும் மிடில் ஆர்டர் வீரர்களும் வரிசையாக அவுட் ஆனார்கள். அவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ், ரபாடா என்று டெல்லி பவுலர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தனர்.

டேவிட் மில்லர்
டேவிட் மில்லர் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி 62 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லரும் 16வது ஓவரில் அவுட்டான பின் அவ்வளவுதான், ராஜஸ்தான் அணியின் கதை முடிந்தது என்று கருதப்பட்டது. ஏனென்றால் ராகுல் திவாதியாவும் அவுட்டாகிவிட்டார். களத்தில் கிறிஸ் மோரிஸ், உனட்கட் மட்டுமே இருந்தனர்.

அதிரடி
ராஜஸ்தான் கதை முடிந்தது என்று நினைத்த போதுதான் உனட்கட் - மோரிஸ் தங்கள் மேஜிக்கை நிகழ்த்தினார்கள். கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில் 19வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவர் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் கிறிஸ் மோரிஸ், கொஞ்சம் கூட கவலைப்படாமல் சிக்ஸர்களை பறக்க விட்டார்.

சிக்ஸர்
மிக இக்கட்டான அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் சென்றது. கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசி ஓவரை டாம் கரன் வீசினார். புல் டாஸ், ஸ்லோ பால்களை இவர் வீச, கவலையே படமால் அதை அடுத்தடுத்து சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார். இரண்டாவது பாலில் ஒரு சிக்ஸ், 4வது பாலில் ஒரு சிக்ஸ் என்று மேட்சை முடித்தார்.

எத்தனை ரன்கள்
நேற்று 18 பந்துகள் பிடித்த கிறிஸ் மோரிஸ் 36 ரன்கள் எடுத்தார். முன்னதாக ராஜஸ்தான் - பஞ்சாப் போட்டியில் கடைசி இரண்டு பாலில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் அப்போது சஞ்சு சாம்சன் மோரிஸுக்கு ஸ்டிரைக் கொடுக்கவில்லை.

பதிலடி
அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் கடைசி பாலில் அவுட்டாகி ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு கிறிஸ் மோரிஸ் பதிலடி கொடுத்துள்ளார். நானும் சிக்ஸ் அடிப்பேன், என்னாலும் மேட்சை முடிக்க முடியும் என்று நேற்று அதிரடி சிக்ஸ்களை அடித்து மேட்சை முடித்து, தன்னை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications