Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்கல... கடைசி வரை பரபரப்பு.. ஷாக் கொடுத்த மோரிஸ்..ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் அதிரடியுடன் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (9), ப்ரித்வி ஷா (2), ரஹானே (8) மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (0) எடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி அந்த அணி இதனால் 37 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து டெல்லி அணி தடுமாறி வந்தது.

பண்ட் போராட்டம்

பண்ட் போராட்டம்

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். அறிமுக வீரர் லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அவர் 32 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய லலித் யாதவ் 20 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் டாம் கரண் (20) கிறிஸ் வோக்ஸ் (15) அஸ்வின் (7), ரபாடா (9) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியை போலவே தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (2), மன்னன் வோஹ்ரா (9) ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் (4), சிவம் தூபே (2) டெல்லி அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினர்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 43 பந்துகளில் 62 ரன்களை விளாசி அவுட்டானார். அதன் பின்னர் கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்ட கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரண் வீசிய ஓவரை கிறிஸ் மோரிஸ் துவம்சம் செய்ததால் 19.4 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Thursday, April 15, 2021, 23:38 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+