Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேள்வியே இல்லை.. இவர்தான் அடுத்த சிஎஸ்கே கேப்டன்.. 4 நாட்களில் நடந்த முக்கிய டிவிஸ்ட்..பக்கா முடிவு

சென்னை: 2022ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக வர போகும் வீரர் யார் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இதற்கான விடை நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் கிடைத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்து தொடர் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் 2021 ஏலமும் நடக்க உள்ளது. நாளை சென்னையில் மினி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்த ஏலம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் 2022ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக வர போகும் வீரர் யார் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இதற்கான விடை நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தற்போது தோனி இருக்கிறார். ஆனால் இதுவே பெரும்பாலும் அவருக்கு கடைசி தொடராக இருக்கும்.

தோனி

தோனி

அடுத்த வருடம் தோனி ஆடினாலும் அவர் பெரும்பாலும் கேப்டனாக இருக்க மாட்டார். வேறு ஒரு வீரரை உள்ளே கொண்டு வந்துவிட்டு, அவருக்கு கேப்டன்சியை கொடுத்து வழி நடத்துவார். இதில் சிஎஸ்கே அணி முதலில் இரண்டு பேரை குறி வைத்தது . அதன்படி கேன் வில்லியம்சன், ஸ்மித் ஆகிய வீரர்களை குறி வைத்தது.

கேப்டன்

கேப்டன்

ஆனால் அடுத்த வருடம் உருவாக்கப்பட உள்ள புதிய ஐபிஎல் அணி ஒன்றின் கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். குஜராத் அல்லது லக்னோ அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. கொச்சி அணி உருவாக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

ஸ்மித்

ஸ்மித்

இன்னொரு பக்கம் ஸ்மித் டி 20 ;போட்டிகளில் பெரிய அளவில் ஆடுவது இல்லை. இதனால் அவருக்கும் வாய்ப்புகள் கிடைக்காது என்கிறார்கள். இதனால் சிஎஸ்கே அணி இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்திய வீரரை கேப்டனாக நியமித்து தோனி அவரை சிஎஸ்கேவில் வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

யார் வருவார்?

யார் வருவார்?

பெரும்பாலும் சிஎஸ்கே கேப்டனாக அடுத்த வருடம் பண்ட் தேர்வாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் தோனிக்கு இணையாக சென்னையில் வரவேற்பை பெற்றுள்ளார். நேற்று பண்டுக்கு சென்னை மக்கள் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தனர். பண்ட் பேட்டிங் செய்யும் போது அவரை பாராட்டி ஊக்கம் அளித்தனர்.

 இவர்தான் இணை

இவர்தான் இணை

தோனிக்கு இணையாக பண்ட் சென்னையில் மதிக்கப்படுகிறார். இது போக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். இதெல்லாம் போக தற்போதெல்லாம் பீல்டிங் நிற்க வைப்பது. பவுலர்களை வழி காட்டுவது என்று பண்ட் ஒரு கேப்டன் போலவே செயல்படுகிறார். அவரிடம் நல்ல கேப்டன்சி திறமைக்கான அறிகுறிகள் தென்படுகிறது.

 அனுபவம்

அனுபவம்

நேற்று லாரன்ஸின் விக்கெட்டை எடுக்க இவர் போட்டுக்கொடுத்த திட்டம்தான் உதவியது. ஒரு கேப்டனுக்கான திறமை இவரிடம் உள்ளது.இதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக பண்ட் சிஎஸ்கே கேப்டனாக வர வாய்ப்புள்ளது. அடுத்த வருடம் ஐபிஎல் ஏலமும் பெரிய அளவில் நடக்கும். மொத்தமாக அணிகள் எல்லாம் கலைக்கப்படும்.

கேப்டன் வாய்ப்பு

கேப்டன் வாய்ப்பு

ஒரு சில வீரர்கள் மட்டும் ஆர்டிஎம் மூலம் எடுக்கப்படுவார்கள். இதனால் பண்ட் பெரும்பாலும் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புகள் உள்ளது. சென்னை மக்களும் தோனியின் இடத்தில் பண்டை கேப்டனாக ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Wednesday, February 17, 2021, 9:34 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+