எல்லா பவுலரும் செய்த "ஒரே" தவறு.. அப்பட்டமாக தெரிந்த பிரச்சனை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
மும்பை: சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தனர். சென்னையின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய பவுலர்கள் செய்த முக்கியமான தவறு ஒன்றுதான் காரணம்.
சென்னை டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிஎஸ்கேவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் டாஸ் வென்றது.
டாஸ் வென்ற கேப்டன் பண்ட் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்து. அதன்பின் டெல்லி அணி பேட்டிங் இறங்கி அதிரடி காட்டியது.

டெல்லி
சென்னைக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர். முதல் ஓவரிலேயே ப்ரித்வி ஷா, தவான் அதிரடியாக ஆடினார். இரண்டு பேருமே ஓவருக்கு 10 ரன்கள் அடித்து ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

பவர் பிளே
முதல் பவர் பிளேவிலேயே 60 ரன்கள் வரை டெல்லி அணி எடுத்துவிட்டது. அதன்பின் ஸ்பின் பவுலர்கள் வந்தும் கூட ஆட்டம் பெரிதாக மாறவில்லை. பிட்ச் பெரிதாக டர்ன் ஆகவில்லை. இதனால் ஸ்பின் பவுலர்களின் பொந்துகளிலும் டெல்லி வீரர்கள் அதிரடியாக அடித்து ஆடினார்கள்.

சிஎஸ்கே
இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் எல்லோரும் ஒரே இடத்தில்தான் சொதப்பினார்கள். தொடக்கத்திலேயே சிஎஸ்கே பவுலர்கள் தொடர்ந்து ஸ்லோ பால் வீசினார்கள். ஸ்லோ பால் பவுன்சர், ஸ்லோ யார்க்கர், ஸ்லோ ஷார்ட் பால் என்று கடைசி ஓவரில் பவுலிங் செய்வது போல செய்தனர். விக்கெட் எடுப்பது மீது கவனம் செலுத்தவில்லை.

திட்டம் என்ன
ஏன் இந்த திட்டத்தில் சிஎஸ்கே பவுலர்கள் களமிறங்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை டெல்லி வீரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். ஸ்லோவாக வந்த பந்தை எல்லாம் பார்த்து நிதானமாக பவுண்டரி சிக்ஸ் என்று பறக்கவிட்டனர். இங்குதான் சிஎஸ்கே முதல் 10 ஓவரில் சொதப்பியது .

கட்டர்
முக்கியமாக பலர் கட்டர் பவுலிங் செய்தனர். யார் பவுலிங் போட்டாலும் இதே மாதிரிதான் பவுலிங் செய்தனர். சிஎஸ்கேவிற்கு இந்த ஸ்லோபால் திட்டத்தை போட்டுக்கொடுத்தது யார் என்று தெரியவில்லை. மொத்தமாக சிஎஸ்கே வசம் இருந்த ஆட்டம் சென்னை அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.


Click it and Unblock the Notifications