For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவின் ஃபர்ஸ்ட் ப்ளான்.. இளம் வீரர்களை பட்டை தீட்டி வரும் தோனி.. அதிரடி கன்ஃபார்ம்!

துபாய்: ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே அதிரடி காட்ட சிஎஸ்கேவின் இளம் வீரர்களுக்கு கேப்டன் தோனி முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான் மோதுகின்றன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்பதால் ஐசிசி இந்த முடிவினை எடுத்துள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியிருந்தது. எனவே திருப்பிக் கொடுக்க சிஎஸ்கே முணைப்பு காட்டி வருகிறது.

முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளன. சிஎஸ்கே துபாயில் உள்ள ஓட்டலிலும், மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் உள்ள ஓட்டலிலும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 13ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டீவ் என்ற முடிவை பெற்றுள்ளனர். இதனையடுத்து இரு அணிகளும் தங்களது முதற்கட்ட பயிற்சிகளை தொடங்கி விட்டனர்.

தோனியின் அட்வைஸ்

தோனியின் அட்வைஸ்

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தோனி முன்கூட்டியே பயிற்சி முகாம்களில் கலந்துக்கொள்வது, வீரர்களை தனது திட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்துவதற்காக தான். இந்த முறையும் அப்படி தான் செய்திருக்கிறார். அந்த வீடியோவில் இளம் வீரர்களுக்கு அவர் பேட்டிங் குறித்து அட்வைஸ்களை தெரிவித்து வருகிறார்.

காரணம்

காரணம்

குறிப்பாக தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட்டிடம் அவர் எப்படி டிஃபன்ஸ் மேற்கொள்வது என்பதற்கான அறிவுரைகளை தெரிவித்து வருகிறார். ருத்ராஜ் கெயிக்வாட் வழக்கமாக தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் ரன் எடுக்க திணறுவார். பின்னர் தொடர்சியாக ரன்களை குவிப்பார். ஆனால் இந்த முறை தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்க தோனி அவரை தயார் செய்து வருகிறார்.

Story first published: Saturday, August 21, 2021, 13:21 [IST]
Other articles published on Aug 21, 2021
English summary
CSK Captain Dhoni gives a batting advice to opening player Ruturaj Gaikwad at training in UAE
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+