Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏக்கத்தோடு திரும்பி வந்த ரெய்னா.. ஒரே வார்த்தைதான்.. சிஎஸ்கே சிஇஓ அனுப்பிய வலுவான "மெசேஜ்".. அதிரடி!

சென்னை: ரெய்னா குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரெய்னா மீண்டும் அணிக்குள் வந்து இருக்கிறார். கடந்த இரண்டு வாரமாக மிக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.

சிஎஸ்கே அணியுடன் மிகவும் தாமதமாகவே இவர் இணைந்தார். குஜராத்தில் பாதி நாட்கள் பயிற்சி மேற்கொண்டவர், பின் சிஎஸ்கே கேம்பில் இணைந்தார்.

எப்படி

எப்படி

கடந்த இரண்டு வாரமாக சென்னை வீரர்களுடன் சேர்ந்து இவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் ரெய்னா இடம்பெறவில்லை. கடந்த சீஸனின் தொடக்கத்தில் ரெய்னாவின் உறவினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டனர்.

கொலை

கொலை

இதன் காரணமாக இந்தியா திரும்பியவர், அந்த தொடரை புறக்கணித்தார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் ரெய்னா சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்று கேள்வி எழுந்தது. சென்னை அணிக்கும் இவருக்கும் கருத்த வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது.

கருத்து

கருத்து

ஆனால் ரெய்னா திரும்பி வந்த பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் அணிக்குள் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ரெய்னாவின் வருகை குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், ரெய்னா மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சிஎஸ்கே அணியில் ஆட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்.

ஆர்வம்

ஆர்வம்

இவர் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் நன்றாக ஆடினார். அதன்பின்பும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். விஜய் ஹசாரே கோப்பை போட்டி 50 ஓவர் போட்டி என்பதால் அதில் ஆடவில்லை. எங்களுடன் இவர் தீவிரமாக ரெய்னா பயிற்சி மேற்கொண்டு வருகிறார் .

ஏக்கம்

ஏக்கம்

நன்றாக ஆட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது.அவர் மிகவும் திறமையானவர். அவர் சிஎஸ்கே அணிக்கு நிறைய செய்து இருக்கிறார். இவர்தான் கடனாத 10-12 வருடங்களுக்கு ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், என்று ரெய்னாவை பாராட்டி சென்னை சிஇஓ பேசி உள்ளார்.

சிறப்பு

சிறப்பு

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கும் ரெய்னாவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏற்றுக்கொண்டுவிட்டது என்ற மெசேஜை சிஇஓ அனுப்பி உள்ளார். இதனால் ரெய்னா ஆடும் அணியில் இடம்பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.. ஏக்கத்தோடு சென்னை அணிக்கு திரும்பி வந்த ரெய்னாவிற்கு இது கண்டிப்பாக நல்ல செய்தியாக இருக்கும்.

Story first published: Friday, April 9, 2021, 8:37 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+