Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வார்னிங்.. சிஎஸ்கே வலைப்பயிற்சியில் டென்சன் ஆன தோனி.. காரணம் சாகர்.. என்ன நடந்தது?

சென்னை: சிஎஸ்கே வலைபயிற்சியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

டெல்லிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இரண்டாவது ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னைக்கும் பஞ்சாப் அணிக்கும் இரண்டாவது மேட்ச் நடக்க உள்ளது.

கடந்த போட்டி நடந்த மும்பை மைதானத்தில்தான் இந்த போட்டியும் நடக்கும் என்பதால் சிஎஸ்கேவின் பவுலிங் படை தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

பயிற்சி

பயிற்சி

பஞ்சாப் அணியிடம் சிறப்பான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அந்த அணியில் ரைலி, ஜெய் ரிச்சர்ட்சன் என்று சிறப்பான பவுலர்களும் உள்ளனர். முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் 222 ரன்கள் எடுத்தது. இதனால் கண்டிப்பாக சிஎஸ்கேவிற்கு இந்த போட்டி மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பவுலிங்

பவுலிங்

சிஎஸ்கே வலைபயிற்சியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் பாஸ்ட் பவுலர் சாகர் வலைப்பயிற்சியில் மோசமாக சொதப்பியதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காமல், இவர் ரன்களை வாரி வழங்கினார்.

வலை பயிற்சி

வலை பயிற்சி

வலைப்பயிற்சியிலும் இவர் ஸ்விங் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளார். சமீப காலங்களில் இவரால் சரியாக பந்தை ஸ்விங் செய்ய முடிவது இல்லை. வளப்பயிற்சியிலும் இவரால் நேற்று திட்டமிட்டபடி பவுலிங் செய்ய முடியவில்லை.

கோபம்

கோபம்

இவரை தவிர அணியில் எடுக்க வேறு பவுலர்கள் இல்லை. ஹரிசங்கர் ரெட்டி இருந்தாலும் தோனி அவருக்கு வாய்ப்பு கொடுப்பது கஷ்டம். ஆனால் சாகரோ சரியான லைனில் கூட பவுலிங் செய்ய முடியாமல் நேற்று திணறி இருக்கிறார்.

வார்னிங்

வார்னிங்

இதையடுத்து சாகரிடம் தோனி வார்னிங் கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி பவுலிங் செய்யாதீர்கள். சீக்கிரம் லைனை சரி செய்யுங்கள் என்று தோனி வார்னிங் கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன.

Story first published: Thursday, April 15, 2021, 12:10 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+