For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொயின் அலிக்கு சிஎஸ்கே தலைமையே பாராட்டு.. சிக்கலில் சீனியர் வீரர்.. இனி வாய்ப்பு அவ்ளோதான்!

மும்பை: சென்னை அணியில் மொயின் அலியின் செயல்பாடு பயிற்சியாளரை வியக்கவைத்துள்ளதால் அனுபவ வீரர் ஒருவரின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சிஎஸ்கே ஏலம்

சிஎஸ்கே ஏலம்

இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் கழட்டிவிடப்பட்ட இவரை ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி. இந்நிலையில் பேட்டிங் பவுலிங் என சிஎஸ்கேவுக்கு சிறப்பான பங்களிப்பை அவர் கொடுத்து வருகிறார்.

அசத்தல்

அசத்தல்

சென்னை அணியில் 3வது வீரராக களமிறங்கும் மொயின் அலி இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 36, 46, 26 என ரன்களை அடித்துள்ளார். இதில் சிறப்பு என்னென்றால் மொயின் அலி களமிறங்கியது முதலே அதிரடி காட்டி குறைந்த பந்துகளில் ரன்களை எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். இதனால் அணிக்கு நல்ல அடித்தளம் அமைகிறது. இதே போல பவுலிங்கிலும் 3 போட்டிகளில் 4 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ப்ளெம்மிங் பாராட்டு

ப்ளெம்மிங் பாராட்டு

இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், சிஎஸ்கேவில் கடந்த வருடம் ஆல்ரவுண்டர்கள் செயல்பாட்டில் சிறிது பிரச்னை இருந்தது. ஆனால் இந்த வருடம் மொயின் அலி நாங்கள் எதிர்பார்த்ததை கொடுத்து அதை சரிசெய்துவிட்டார். 3வது வீரராக களமிறங்கும் அவர் தனது வியப்பளிக்கும் ஆட்டத்தால் அணி அதிக ஸ்கோர் அடிக்க உதவுகிறார். சென்னை அணி 20 ஓவர்களிலும் சிறப்பான பேட்டிங் செய்யவில்லை. எனினும் அதிகப்படியான சிறந்த வீரர்கள் இருப்பதால் இறுதியில் நல்ல ஸ்கோரை எட்டிவிட்டோம் என தெரிவித்தார்.

இம்ரான் தாஹீருக்கு சிக்கல்

இம்ரான் தாஹீருக்கு சிக்கல்

மொயின் அலிக்கு பாராட்டு கிடைத்திருப்பதால் அவர் இனி அனைத்து போட்டிகளிலும் இடம் பெறுவார். இதனால் அணியின் சீனியர் வீரர் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு பறிபோகிறது. இம்ரான் தாஹீருக்கு கடந்தாண்டே பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்துவதால் தாஹீரின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Tuesday, April 20, 2021, 14:35 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
CSK Coach Stephen Fleming lauds Moeen Ali for value to team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+