Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வார்னிங் முடிந்துவிட்டது.. தூக்கிடுங்க.. சிஎஸ்கே வீரரை கிழித்த நெட்டிசன்கள்.. கடுப்பில் தோனி!

சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் ஓப்பனிங் வீரர் ரூத்துராஜை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

Dhoni விளக்கம் ! Ruturaj-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன்? | Oneindia Tamil

ரூத்துராஜ் நன்றாக ஆடுவார்.. அவர் மீது நம்பிக்கை இருக்கிறது.. 2 போட்டியில் ஆடாததை எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது என்று இன்றுதான் தோனி ரூத்துராஜுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் தோனி இப்படி சொல்லி முடித்து 30 நிமிடத்திற்குள் ரூத்துராஜ் மீண்டும் சொதப்பி உள்ளார்.

சிஎஸ்கேவிற்கும் ராஜஸ்தானுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

கடந்த இரண்டு போட்டியில் ரூத்துராஜ் மோசமாக ஆடி சொதப்பினார். டெல்லிக்கு எதிரான போட்டியில் ரூத்துராஜ் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் மீண்டும் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனாலும் இன்று அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மோசம்

மோசம்

இரண்டு முறை சொதப்பினாலும், இளம் வீரர் என்று நம்பி ரூத்துராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ரூத்துராஜ் இன்றும் சிஎஸ்கே அணியை ஏமாற்றி உள்ளார். சிஎஸ்கேகாவிற்காக களமிறங்கி வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி உள்ளார். இன்றும் அவரின் பேட்டிங் மோசமாக இருந்தது.

பேட்டிங்

பேட்டிங்

சரியாக பந்தை கணிக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டார். பந்து எப்படி வருகிறது என்று கூட ரூத்துராஜால் கணிக்க முடியவில்லை. சுத்தமாக ரூத்துராஜ் பேட்டிங்கில் இன்று கொஞ்சம் கூட ஸ்பார்க் இல்லை. கடந்த இரண்டு போட்டியிலும் அவரிடம் ஸ்பார்க் இல்லை. இதனால் நெட்டிசன்கள் இவருக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளனர்.

கொதிப்பு

கொதிப்பு

ரூத்துராஜை அணியில் இனியும் வைத்திருக்க கூடாது. அவரை நீக்க வேண்டும். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெற கூடாது. உத்தப்பாவிற்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ரூத்துராஜ் கிழிக்க தொடங்கி உள்ளனர்.

தோனி

தோனி

தோனியும் இதே திட்டத்தில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்று ரூத்துராஜுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு கடைசி வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இன்றும் அவர் சரியாக ஆடாததால் கண்டிப்பாக உத்தப்பாதான் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள்.

Story first published: Monday, April 19, 2021, 20:18 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+