அந்த பக்கமே போக முடியாது.. பிளானே போச்சு.. வருத்தத்தில் தோனி.. எல்லாத்துக்கும் காரணம் சென்னைதான்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரிலும் சென்னையில் விளையாட முடியாத நிலைக்கு சிஎஸ்கே அணி தள்ளப்பட்டு உள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் கொரோனா காரணமாக அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

6 பந்துகள மட்டும் வச்சுக்கிட்டு சிறப்பான பௌலர்னு மீண்டும் நிரூபிச்சிருக்காரு... சாம் கர்ரன் பாராட்டு

பொதுவாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளுக்கும் அவர்களுக்கு என்று ஹோம் மைதானம் இருக்கும். ஹோம் மைதானங்களை பொறுத்தே ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு

தேர்வு

சென்னை மைதானத்தை குறி வைத்தே பொதுவாக சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்யும். அதிகமாக ஆப் ஸ்பின் பவுலர்களை சென்னை அணி தேர்வு செய்வதே மைதானத்தை மனதில் வைத்துதான். சென்னைய அணி ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கு என்பதால் அதற்கு ஏற்றபடி இத்தனை வருடம் வீரர்களை தேர்வு செய்தனர்.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

ஆனால் 2018ல் சென்னையில் நடந்த காவிரி போராட்டம் காரணமாக ஒரே ஒரு போட்டி மட்டுமே சேப்பாக்கத்தில் நடந்தது. அந்த வருடம் சென்னை அணியால் முழுமையாக ஹோம் மைதானத்தில் ஆட முடியவில்லை. இந்த மொத்தமாக சிஎஸ்கே போட்டிகள் எல்லாம் புனேவிற்கு மாற்றப்பட்டது.

புனே

புனே

அதன்பின் 2019ல் மட்டுமே சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியது. பின் மீண்டும் கொரோனா காரணமாக 2020ல் சென்னையில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின் மீண்டும் 2021ல் தற்போது சிஎஸ்கேவிற்கு சென்னை ஹோம் மைதானமாக கிடைக்காமல் போய் உள்ளது. நான்கு வருடத்தில் 3 முறை ஹோம் மைதானத்தை இழந்த ஒரே அணி சென்னை மட்டுமே.

சென்னை

சென்னை

சென்னைக்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்து இருந்த தோனிக்கு பெரிய ஏமாற்றமாக இது மாறியுள்ளது. கவுதம், மொயின் அலி போன்றவர்களை சிஎஸ்கே அணி இதனால்தான் ஏலம் எடுத்தது. ஆனால் தற்போது சென்னையில் ஆட முடியாத சூழ்நிலையே சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ளது.

மோசம்

மோசம்

இதில் டெல்லி, கொல்கத்தா, மும்பையில் சென்னைக்கு நிறைய போட்டிகள் உள்ளன. இதில் கொல்கத்தா தவிர எதுவும் ஸ்பின் பிட்ச் கிடையாது. இதனால் இப்போதே தோனியும், சிஎஸ்கே நிர்வாகிகளும் கவலையில் உள்ளனர். இந்த முறையும் சென்னை பக்கம் போக முடியவில்லையே, ஹோம் மைதானத்தை இழந்து விட்டோமே என்ற கவலையில் சிஎஸ்கே அணி உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: CSK is not happy as it losses home ground Chennai this year too.
Story first published: Thursday, April 8, 2021, 15:57 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X