முடியவே முடியாது.. ராஜஸ்தானின் "அந்த" கோரிக்கையை ஏற்க மறுக்கும் சிஎஸ்கே? டிரான்ஸ்பர் நடக்குமா?
சென்னை: ராஜஸ்தான் அணி உத்தப்பாவை டிரான்ஸ்பர் செய்ய கேட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. ராஜஸ்தான் அணியில் இருக்கும் பல வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் வெளியேறி வருகிறார்கள்.
இந்த தொடரின் தொடக்கத்திலேயே காயத்தோடுதான் ஆர்ச்சர் அணியில் இணைந்தார். அவருக்கு கடைசி வரை காயம் சரியாகாத நிலையில் தொடரில் இருந்து வெளியேறினார்.

காயம்
இதையடுத்து அணியின் இன்னொரு மூத்த வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் அடைந்தார். ஒரே போட்டி ஆடிய நிலையில் இவருக்கு விரல் உடைந்தது. இவரும் இதனால் தொடரில் இருந்தே வெளியேறினார்.

மோசம்
இதையடுத்து ஆண்ட்ரு டை, லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் கொரோனா காரணமாக வெளியேறினார்கள். இப்போது ராஜஸ்தான் அணி நல்ல ஓப்பனிங் வீரர் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த அணி சிஎஸ்கேவிடம் உத்தப்பாவை கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உத்தப்பா
டிரான்ஸ்பர் விண்டோ மூலம் சிஎஸ்கேவிடம் உத்தப்பாவை அந்த அணி கேட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மொயின் அலி, ராயுடு காயத்தில் உள்ளனர். இவர்கள் உடனே மீண்டு வருவது கடினம்.

அவசியம்
இதனால் மாற்று வீரராக உத்தப்பா அணியில் இருப்பது அவசியம். இதன் காரணமாக அவரை கொடுக்கும் முடிவில் சிஎஸ்கே இல்லை என்கிறார்கள். எந்த வீரரையும் டிரான்ஸ்பர் செய்யும் எண்ணம் சிஎஸ்கேவிற்கு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications