இவரை டீமில் எடுங்க.. பவுலிங் பிரச்சனையே இருக்காது.. தோனி குறிவைக்கும் பாகுபலி.. சிஎஸ்கேவில் டிவிஸ்ட்
சென்னை: சிஎஸ்கே அணியில் அடுத்த போட்டியில் சங்கருக்கு பதிலாக புதிய இளம் வீரர் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்த நிலையில் அடுத்த போட்டிக்காக சிஎஸ்கே பயிற்சி எடுத்து வருகிறது. சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையே 16ம் தேதி போட்டி நடக்க உள்ளது.
கடந்த போட்டியில் டெல்லியிடம் சிஎஸ்கே தோல்வி அடைய அணியின் பேட்டிங்தான் முக்கியமான காரணமாக இருந்தது. நன்றாக சென்று கொண்டு இருந்த போட்டியில் பவுலிங் சொதப்பியதால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே
சிஎஸ்கேவில் தற்போது பவுலிங் சரியில்லாமல் தோனி திணறி வருகிறார். வெளிநாட்டு பவுலர்கள் ஒரு பக்கம் இல்லையென்றால் இன்னொரு பக்கம் இந்திய பவுலர்களும் சரியாக வீசுவது இல்லை. ஷரத்துல் அதிக ரன் கொடுத்து முதல் போட்டியில் சொதப்பினார். ஆனால் இவர் எப்போது வேண்டுமானாலும் பார்மிற்கு திரும்புவார்.

தாக்கூர்
இதனால் தாக்கூரை நீக்க முடியாது. அதே சமயம் அணியில் இருக்கும் சாகர் சரியாக பவுலிங் செய்வது இல்லை. இவர் விக்கெட்டும் எடுப்பது இல்லை. அதிகமாக ரன்னும் விட்டுக்கொடுக்கிறார். கடந்த வருடமும் இவர் சரியாக ஆடவில்லை.

இந்திய பவுலர்
இதனால் அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி வேறு இந்திய பவுலரை களமிறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி சிஎஸ்கே அணியில் ஹரிசங்கர் ரெட்டி என்ற ஆந்திர வீரர் எடுக்கப்படலாம் என்கிறார்கள். எம். ஹரி சங்கர் ரெட்டி ஆந்திராவில் முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.

ஹரிசங்கர் ரெட்டி
வலதுகை பவுலர் ஆவார். பேட்டிங்கும் செய்ய கூடியவர். இவர் பயிற்சி ஆட்டங்களிலேயே சிஎஸ்கேவிற்காக சிறப்பாக பவுலிங் செய்தார். யார்க்கர் தொடங்கி பவுன்சர் வரை நன்றாக வீசினார். அதேபோல் நன்றாக ஸ்விங் பவுலிங் செய்தார். இவருக்கு 22 வயதுதான் ஆகிறது.

வாய்ப்பு
தற்போது கூடுதலாக ஹரிசங்கர் ரெட்டி வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வருகிறார். இதனால் அடுத்த போட்டியில் சாகருக்கு பதிலாக ஹரி சங்கர் ரெட்டி களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சாகர் சொதப்பி வரும் நிலையில் தோனி இவரை களமிறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications