Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அவரெல்லாம் தேவையில்லை".. மூத்த வீரருக்கு டாட்டா காட்டும் தோனி.. சிஎஸ்கேவில் இன்று முக்கிய மாற்றம்!

சென்னை: டெல்லிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இருந்து மூத்த வீரர் ஒருவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

பெங்களூர் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூர் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இரண்டு அணிகளும் மும்பையில் இன்று மோதிக்கொள்கின்றன.

ஒரு இடம்

ஒரு இடம்

சென்னை அணியில் ஆட கூடிய 11 வீரர்களில் கிட்டத்தட்ட 10 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் ஒரே ஒரு வீரரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் ஓப்பனிங் வீரராக ரூத்துராஜ் இந்த முறையும் களமிறங்க உள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இவருடன் டு பிளசிஸ் களமிறங்க மாட்டார். அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய உள்ளார். இதனால் ஓப்பனிங் இறங்க போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. ரூத்துராஜ் உடன் பெரும்பாலும் இன்று ராபின் உத்தப்பா களமிறக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

சையது

சையது

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் உத்தப்பா மிகவும் சிறப்பாக ஆடினார். கேரள அணிக்காக அதிரடியாக ஆடியவர் கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் 80+ ரன்களை எடுத்தார். அந்த டி 20 தொடர் முழுக்கவே உத்தப்பா ருத்ரதாண்டவம் ஆடினார் என்றுதான் கூற வேண்டும்.

வாய்ப்பு

வாய்ப்பு

தற்போது உத்தப்பா மிக சிறப்பான பார்மில் இருக்கிறார். இதனால் அவர்தான் அணியில் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள். இதனால் சிஎஸ்கேவில் இன்று பெரும்பாலும் அம்பதி ராயுவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. உத்தப்பா உள்ளே வருவதால் ராயுடு வெளியேறுவார் என்கிறார்கள்.

ராயுடு

ராயுடு

ராயுடு சமீப நாட்களாக பார்மில் இல்லை. கடந்த சீசனிலும் சில போட்டிகளில் மட்டுமே ராயுடு கொஞ்சம் கவனம் ஈர்த்தார். இதனால் அவரை ஓரம்கட்டிவிட்டு உத்தப்பாவை சிஎஸ்கே அணி பயன்படுத்தும் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Saturday, April 10, 2021, 15:43 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+