Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேருமே வேண்டாம்.. புது ஆட்களை இறக்குங்க.. தோனியின் செல்ல குட்டிகளுக்கு ஸ்கெட்ச்.. சிஎஸ்கே பிளான்!

சென்னை: சிஎஸ்கே அணியில் முக்கியமான இரண்டு வீரர்களுக்கு சில நாட்கள் டெஸ்ட் கொடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சிஎஸ்கே அணியில் கடந்த வருடம் பேட்டிங் எப்படி பிரச்சனையாக இருந்ததோ, அதேபோல் இந்த வருடம் பவுலிங் பிரச்சனையாக இருக்கிறது. நல்ல பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் திணறிக்கொண்டு இருக்கிறது.

முக்கியமாக வெளிநாட்டு பவுலர்கள் பெரிய அளவில் இல்லாமல் தோனி குழப்பத்தில் இருக்கிறார். தற்போது சிஎஸ்கேவில் இரண்டு வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள் மட்டுமே உள்ளனர்.

யார்

யார்

சாம் கரன், பிராவோ மட்டுமே சிஎஸ்கேவில் வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள். லுங்கி நிகிடி, பெஹன்டிராப் இன்னும் சிஎஸ்கே அணியோடு இணையவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு வீரர்களை தூக்கும் திட்டத்தில் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

அதன்படி சிஎஸ்கேவின் சாகருக்கு பதிலாக ஹரி சங்கர் ரெட்டியும் கொண்டு வரும் பிளானில் அணி நிர்வாகம் உள்ளது என்கிறார்கள். ஹரி சங்கர் ரெட்டி, தற்போது வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். இதனால் அவரை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தில் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பதிலடி

பதிலடி

இன்னொரு பக்கம் பிராவோவிற்கு பதிலாக வெளிநாட்டு வீரரை களமிறக்கும் திட்டத்திலும் அணி நிர்வாகம் உள்ளதாம். இதில் பிராவோ கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லை. இன்னொரு பக்கம் சாகரும் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் திணறி வருகிறார்.

தேவையில்லை

தேவையில்லை

இரண்டு பேருமே சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தோனிக்கு இவர்கள் நெருக்கம் என்பதால் அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மேலும் இவர்களுக்கு சலுகைகள் வழங்காமல் மொத்தமாக நீக்கும் முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Story first published: Wednesday, April 14, 2021, 11:53 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+