Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நோ சான்ஸ்.. சாட்டையை சுழற்றிய தோனி.. சிஎஸ்கேவில் முக்கிய வீரருக்கு டாட்டா.. எதிர்பார்த்த டிவிஸ்ட்!?

சென்னை: சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ் இன்று அணியில் ஆட 90% வரை வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

Recommended Video

CSK-வில் முக்கிய வீரருக்கு டாட்டா.. எதிர்பார்த்த டிவிஸ்ட்!? | Uthappa replace Ruturaj?

2021 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று சிஎஸ்கே அணி வலுவாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் இந்த முறை பேட்டிங், பவுலிங் என்று எல்லாமே வலிமையாக உள்ளது. அதிலும் மிடில் ஆர்டர் பேட்டிங் நினைத்ததை விட வலிமையாக உள்ளது.

வலிமை

வலிமை

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தற்போது ரூத்துராஜ் மட்டும்தான் சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பி வருகிறார். கடந்த போட்டியில்தான் டு பிளசிஸ் பார்மிற்கு திரும்பினார். ஆனால் ரூத்துராஜ் இன்னும் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து பார்ம் அவுட்டில்தான் இருக்கிறார்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

முக்கியமாக கடந்த மூன்று போட்டியில் மொத்தமாகவே இவர் 15 ரன்கள்தான் எடுத்துள்ளார். இதனால் இன்று நடக்கும் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். இன்று சிஎஸ்கே அணியில் இவர் இடம்பெற 90% வரை வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

தகவல்

தகவல்

ரூத்துராஜுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் பெரும்பாலும் ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். ராபின் உத்தப்பா தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கும் முடிவில் சிஎஸ்கே இருக்கிறதாம்.

வாய்ப்பு

வாய்ப்பு

ரூத்துராஜ் மீது சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை உள்ளது. ஆனாலும் பாதி லீக் போட்டிகள் முடிந்த பின்புதான் இவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும், இவரை வைத்து ரிஸ்க் எடுக்க தோனி விரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன.

சாட்டை

சாட்டை

ரூத்துராஜ் மீது தோனிக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. அவரின் பார்ம் சரியில்லை என்று உணர்ந்து கொண்டு தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். மீண்டும் பார்மிற்கு திரும்பும் வகையில் அவருக்கு சில போட்டிகள் ஓய்வு அளிக்க தோனி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Wednesday, April 21, 2021, 10:05 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+