Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிரான்ஸ்பர் விண்டோ.. சிஎஸ்கே வீரருக்கு குறி வைத்த அந்த அணி.. தட்டி தூக்க ரெடி.. தோனி முட்டுக்கட்டை!

சென்னை: டிரான்ஸ்பர் விண்டோ மூலம் முக்கியமான சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு ராஜஸ்தான் அணி குறி வைத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

Robin Uththappa-வை CSK-விடம் மீண்டும் கேட்கும் Rajasthan அணி.. Transfer திட்டமா?

2021 ஐபிஎல் தொடருக்கான டிரான்ஸ்பர் விண்டோ நேற்று திறக்கப்பட்டது. மே 9ம் தேதி வரை இந்த டிரான்ஸ்பர் விண்டோ அமலில் இருக்கும்.

இதன் மூலம் ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரரை இன்னொரு அணிக்கு டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

எப்படி

எப்படி

ஒரு அணியில் 3 போட்டிக்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள வீரருக்கு இந்த டிரான்ஸ்பர் விண்டோ வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருக்கும் வீரரை வேறு அணி பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக மும்பை அணியில் கிறிஸ் லின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். இவரை வேறு ஒரு அணி டிரான்ஸ்பர் மூலம் பெற முடியும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணி முக்கியமான வீரர்களை டிரான்ஸ்பர் மூலம் பெறும் திட்டத்தில் உள்ளது. அதன் ஒரு கட்டமாக சிஎஸ்கே வீரரை அந்த அணி குறி வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் இருக்கும் மிட்சல் சான்டனரை அந்த அணி குறி வைத்துள்ளதாம். ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே உள்ளனர். நல்ல வெளிநாட்டு ஆல் ரவுண்டர் அந்த அணியில் இல்லை. இதனால் மிட்சலை ராஜஸ்தான் அணி குறி வைத்துள்ளது.

முடியாது

முடியாது

ஆனால் மிட்சலை அனுப்பும் எண்ணம் தோனிக்கு இல்லை என்கிறார்கள். மொயின் அலி காயம் அடைந்துள்ள நிலையில் மிட்சல் முக்கியத்துவம் பெறுகிறார். இதனால் அவரை டிரான்ஸ்பர் செய்யும் திட்டம் சிஎஸ்கே அணிக்கு இல்லை என்கிறார்கள்.

Story first published: Tuesday, April 27, 2021, 11:55 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+