Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

Recommended Video

CSK-விடம் தோல்வி..Eoin Morgan விரக்தி பேச்சு! | IPL T20 | CSK VS KKR | Oneindia Tamil

இந்த போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதும், போட்டிக்கு முன்னர் நடந்த விஷயம் ஒன்று ரசிகர்கள் மனதை வென்றுள்ளது.

 சுவாரஸ்ய விஷயம்

சுவாரஸ்ய விஷயம்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 220 ரன்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் (64), டுப்பளசிஸ் (95*) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல் கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோர் போராடியும் கொல்கத்தா 202 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்த போட்டிக்கு முன்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது பேசுப்பொருளாகி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 220 ரன்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் (64), டுப்பளசிஸ் (95*) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல் கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோர் போராடியும் கொல்கத்தா 202 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்த போட்டிக்கு முன்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது பேசுப்பொருளாகி வருகிறது.

ரெய்னாவின் செயல்

ரெய்னாவின் செயல்

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் களத்தில் கொல்கத்தா வீரர் ஹர்பஜன் சிங், சென்னை வீரர்கள் ஜடேஜா, இம்ரான் தாஹீர் உள்ளிட்டோருடன் பேசி வந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் ரெய்னா ஈகோ எதுவுமின்றி ஹர்பஜனின் காலில் விழுந்து மரியாதை செலுத்துவதற்காக முயன்றார். அவரின் செயலால் திடீரென திகைத்துப்போன ஹர்பஜன், ரெய்னா தனது பாதத்தை தொடாதபடி கீழே அமர்ந்து அவரை தூக்கி கட்டியணைத்தார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அந்த இடத்தில் சாம் கரண், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட இளம் வீரர்களும் இருந்தனர். எனினும் மரியாதை நிமத்தமாக ரெய்னா திடீரென்று பாதத்தில் விழுந்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பயனர் ஒருவர் பகிர, அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சம் உருகி வருகின்றனர்.

சக நண்பர்கள்

சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்திய அணியில் நீண்ட காலம் சேர்ந்து விளையாடியவர்கள் ஆவர். 2011 உலகக்கோப்பை தொடரின் போதும் இருவரும் இந்திய அணியில் இருந்தனர். மும்பை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஹர்பஜன் சிங் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் ரெய்னாவுடன் சேர்ந்து விளையாடினார். தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.

Story first published: Friday, April 23, 2021, 17:08 [IST]
Other articles published on Apr 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+