Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமீரகத்தில் களமிறங்கியது சிஎஸ்கே.. கெத்தாக வலம் வந்த தோனி.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

சென்னை: ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்தனர். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

IPL 2021: UAEல் களமிறங்கிய CSK! கெத்தா வந்த Dhoni | OneIndia Tamil

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரின் 2ம் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

முதல் போட்டியே அதிரடி

முதல் போட்டியே அதிரடி

சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவிட்டால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடைசி லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

ஐபிஎல் தொடருக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் அணி நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்று காலை தனி விமானம் மூலம் அபுதாபி சென்றடைந்தனர். இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களும் அமீரகம் சென்றுள்ளனர். சிஎஸ்கேவில் வீரர்கள் பலரும் தற்போது ஓய்வில் உள்ளனர். பல்வேறு வீரர்கள் சர்வதேச தொடர்கள் எதிலும் பங்கேற்காமல் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் அமீரகம் சென்றுள்ளனர்.

சிஎஸ்கேவில் இணைந்த தோனி

சிஎஸ்கேவில் இணைந்த தோனி

கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சஹார், ருத்ராஜ் கெயிக்வாட் ராபின் உத்தப்பா, கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் துபாய் சென்றடைந்துள்ளனர். துபாயில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பயோ பபுள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள அவர் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 2 முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் இரண்டிலுமே நெகட்டீவ் என முடிவு வரவேண்டும். அப்படி வந்தால் தான் ஐபிஎல் பபுளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

கடந்த முறை பின்பற்றியதை போன்றே முன்கூட்டி பயிற்சியை தொடங்கினால் போட்டியில் நல்ல ஃபார்மில் களமிறங்கலாம் என தோனி திட்டமிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் அணியில் பல வீரர்கள் எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாடாமல் உள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் அவர் எண்ணியுள்ளார்.

மேட்ச் விவரம்

மேட்ச் விவரம்

ஐபிஎல் தொடரில் துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகள் என 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். மற்றபடி இரவுப்போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கு நடைபெறும்.

Story first published: Friday, August 13, 2021, 22:36 [IST]
Other articles published on Aug 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+