Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 11 பேர் யார்? நம்பிக்கையோடு களமிறங்கும் தோனி.. மும்பைக்கு எதிரான முக்கியமான கேம்.. முழு விபரம்

சென்னை: இன்று மும்பைக்கு எதிராக டெல்லியில் நடக்க உள்ள போட்டியில் சிஎஸ்கே அணியில் ஆட போகும் 11 வீரர்கள் யார் என்பது தொடர்பான கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

CSK வெற்றிப்பயணம் தொடருமா? Chennai-Mumbaiயின் Predictable Playing 11 | OneIndia Tamil

2021 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் பரம வைரிகளான சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் இன்று மேட்ச் நடக்க உள்ளது.

இந்த தொடரில் சிஎஸ்கே அணி மும்பையை விட வலிமையாக இருக்கிறது. இதுவரை 6 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் சிஎஸ்கே வென்றுள்ளது.

 வெற்றி

வெற்றி

மும்பை அணி இந்த சீசனில் அவ்வளவு வலிமையாக இல்லை. முக்கியமாக மும்பையின் மிடில் ஆர்டர் இந்த முறை மோசமாக சொதப்பி வருகிறது. பாண்டியா பிரதர்ஸ், இஷான் கிஷன் என்று முக்கியமான வீரர்கள் பார்மில் இல்லை. பும்ராவும் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை.

பார்ம்

பார்ம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் கிட்டத்தட்ட தோனியை தவிர எல்லோரும் பார்மிற்கு வந்துவிட்டனர். ஷரத்துல் தாக்கூர் தவிர மற்ற எல்லோரும் நன்றாக பவுலிங் செய்து வருகிறார்கள். இதனால் இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

பொதுவாக அதே வீரர்களோடு ஆடுவதை சிஎஸ்கே அணி விரும்பும். பிளேயிங் லெவனில் மாற்றம் செய்வதை கேப்டன் தோனி விரும்ப மாட்டார். இதனால் இன்று பெரும்பாலும் சிஎஸ்கே அணி அதே பிளேயிங் லெவனை களமிறக்கும் என்கிறார்கள்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இதனால் இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் ரூத்துராஜ், டு பிளசிஸ், மொயின் அலி, ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரன், ஷரத்துல் தாக்கூர், சாகர், லுங்கி நிகிடி ஆகியோர் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 1, 2021, 14:47 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+