தோனி 7வது வீரராக களமிறங்க இதுதான் காரணம்.. விரைவில் அதிரடி உள்ளது.. உண்மையை உடைத்த சிஎஸ்கே நிர்வாகம்
மும்பை: கேப்டன் தோனி எப்போது டாப் ஆர்டரில் களமிறங்கி அதிரடி காட்டுவார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோனி தலைமையிலான சென்னை அணி நேற்று ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி தலைமையில் 200வது போட்டியில் ஆடிய சென்னை அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்தாலும், தோனியின் பழைய அதிரடியை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் உள்ளது.

ரசிகர்கள் வருத்தம்
இந்த சீசனில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை அணி அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஆனால் இந்த 3 போட்டிகளிலும் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. 3 போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களில் மட்டும் பேட்டிங் செய்த அவர் ஒன்றில் டக் அவுட் மற்ற ஒன்றில் 18 ரன்களே எடுத்தார்.

டாப் ஆர்டர்
கடைசி 11 போட்டிகளில் தோனி ஒரே ஒரு 30+ ரன்கள் அடித்துள்ளார். அதே போல கடைசி 20 போட்டிகளாக ஒரு அரை சதம் கூட தோனி அடிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமாக அவர் 6 - 7 வது வீரராக களமிறங்குவதுதான் பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் கடைசி சில பந்துகளில் களமிறங்கும் அவர் பிரஷருக்கு நடுவே ஆடி அவுட்டாகி விடுகிறார். இதனால் அவர் டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

சூழ்நிலைதான் காரணம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அணிக்காக விளையாடுகிறார். தான் களமிறங்க வேண்டிய பொஷிஷன் குறித்து அவர் ஒரு யோசனையில் இருந்தாலுன், அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து சூழ்நிலைக்கேற்ப களமிறங்கி வருகிறார். ஒரு வேளை தோனி டாப் ஆர்டரில் தேவைப்பட்டால் அணி நிர்வாகமும் கண்டிப்பாக அவரை அதில் களமிறக்கும்.

தோனி வருவார்
தோனி இந்த சீசனில் இதுவரை 2 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடியுள்ளார். அவர் கண்டிப்பாக மிகப்பெரும் அதிரடியுடன் திரும்பி வருவார். சென்னை அணி இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கேப்டனை நாடியுள்ளது. அவர் எப்போதும் எங்களுக்கு மிகப்பெரும் சொத்து என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications