For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: குழப்பத்தில் இருக்கும் தோனி.. முதல் போட்டியே மும்பையுடன்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதோ!

அமீரகம்: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு வருகை தந்து பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர்.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. அயல்நாட்டு வீரர்களும் அணி பபுளுடன் இணைந்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் ஏகபோகத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கணிப்பு

கணிப்பு

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 குறித்து கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஃபாப் டூப்ளசிஸ் மற்றும் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஆகியோர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிபிஎல் தொடரின் போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஓப்பனிங்கில் ருத்ராஜ் கெயிக்வாட்டுடன் ராபின் உத்தப்பா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட்டிக் குழந்தை

சுட்டிக் குழந்தை

இதே போல லோயர் ஆர்டரில் தோனியின் ஆஸ்தான ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் சாம் கரணும் பங்கேற்க மாட்டார். அவர் இன்று தான் அமீரகத்தில் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். கொரோனா விதிமுறைப்படி வீரர்கள் 6 நாட்கள் கட்டாயம் குவாரண்டைனில் இருக்க வேண்டும். முதல் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளன. எனவே அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது.

சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

ருத்ராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், லுங்கி நெகிடி, ஹாசல்வுட்

Story first published: Wednesday, September 15, 2021, 18:17 [IST]
Other articles published on Sep 15, 2021
English summary
CSK's Playing 11 details for 1st match against mumbai indians in IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+