Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி போட்ட புதிய வியூகம்... அணிக்கு திரும்பும் 2 ஸ்டார் ப்ளேயர்ஸ்.. கணிக்கப்பட்ட சிஎஸ்கே ப்ளேயிங் 11

மும்பை: பஞ்சாப் அணியை எதிர்கொள்வதற்காக 2 முக்கிய வீரர்களை சிஎஸ்கே களமிறக்கும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் சென்னை அணியின் ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் படு தோல்வியை சந்தித்து வெளியேறிய சென்னை அணி இந்தாண்டு தொடக்கம் முதலே அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. டெல்லி அணியுடன் மோதி அப்போட்டியில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

உத்தப்பா

உத்தப்பா

இந்நிலையில் இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் சென்னை அணி களமிறங்குகிறது. அதற்காக 2 மாற்றங்கள் அணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இதனால் ரன் குவிப்பில் ஆரம்பத்தில் சோர்வு இருந்தது. இதனால் இந்த முறை தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட அனுபவ வீரர் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங்

பவுலிங்

கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் சொதப்பலாக இருந்தது. அந்த அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தபோதும். டெல்லி கேப்பிடல்ஸ் அணி சுலபமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. எனவே பவுலிங்கில் முக்கிய மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்காக இம்ரான் தாஹீர் அணிக்குள் கொண்டு வந்து மேட்ச் டேர்னராக விளங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11 கணிப்பு:

ப்ளேயிங் 11 கணிப்பு:

ருத்ராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி ஜடேஜா, சாம் கரண், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹீர்

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடிய பிட்ச்சாகும். முதல் இன்னிங்ஸில் இங்கு 200 ரன்கள் என்பது சுலபமான ஒன்று. ஆனால் நேற்று இங்கு நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 150 ரன்களை அடிப்பதற்கே 2 அணிகளும் சிரமப்பட்டன. குறிப்பாக 2 அணிகளிலும் டாப் 5 விக்கெட்கள் வெகு சீக்கிரமாக வெளியேறினர். இதனால் இன்றைய போட்டியில் பிட்ச்-ம் அப்படி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Friday, April 16, 2021, 20:56 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+