Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனியும் இவங்களை நம்பணுமா? ஒரு வார்த்தை கூட பேசாத தோனி.. செம கடுப்பில் சிஎஸ்கே நிர்வாகம்.. என்னாச்சு?

சென்னை: நேற்று சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடிய இரண்டு வீரர்கள் குறித்து தோனி எதுவும் சொல்லாதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

Moeen ali-க்கு நன்றி சொன்ன Dhoni | IPL 2021 | Oneindia Tamil

நேற்று சிஎஸ்கேவிற்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. முதலில் இருந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் திணறினாலும் கடைசியில் மீண்டும் வந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே அணியின் பவுலிங்கும் தற்போது நன்றாக உள்ளதால் முழுமையான அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது.

எப்படி

எப்படி

ஆனால் சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் மட்டுமே தொடர்ந்து சரியாக ஆடாமல் சொதப்பி வருகிறார்கள். ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ் மூன்று போட்டிகள் ஆடி மூன்றிலும் மோசமாக சொதப்பி உள்ளார். மூன்று போட்டியிலும் இவர் மொத்தமாக 15 ரன்கள்தான் எடுத்துள்ளார்.

இன்னொரு வீரர்

இன்னொரு வீரர்

அதேபோல் ஷரத்துல் தாக்கூர் முதல் போட்டியில் மட்டுமே ஒரு விக்கெட் எடுத்தார். அதன்பின் எந்த போட்டியிலும் அவர் விக்கெட் எடுக்கவில்லை. அதிகமாக இவர் ரன்களை வாரி வழங்குகிறார். இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்கு இதுவரை பெரிதாக உதவவில்லை.

மோசம்

மோசம்

இரண்டு பேரின் ஆட்டமும் இதுவரை மோசமாகவே இருந்துள்ளது. ஆனாலும் தோனி இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார். தொடர்ந்து இவர்களை தோனி அணியில் எடுத்துக்கொண்டே இருக்கிறார். நேற்று போட்டிக்கு பின்பும் கூட இவர்களின் மோசமான ஆட்டத்தை தோனி விமர்சிக்க மறுத்துவிட்டார்.

மாற்றம்

மாற்றம்

இவர்களை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவர்களின் ஆட்டத்தில் சிஎஸ்கே சுத்தமாக திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதே அணியுடன் ஆடலாம். வீரர்களை மாற்ற வேண்டாம் என்று தோனி நினைப்பதாக தகவல்கள் வருகின்றன.

Story first published: Tuesday, April 20, 2021, 12:37 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+