Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த இருவர் மீது கோபம்.. பஞ்சாப் போட்டிக்கு பின்.. டிரெஸ்ஸிங் ரூமில் கத்திய தோனி.. என்ன நடந்தது?

சென்னை: நேற்று பஞ்சாப் போட்டிக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி இரண்டு சிஎஸ்கே வீரர்களிடம் கோபத்தை காட்டியதாக கூறப்படுகிறது.

Recommended Video

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

நேற்று சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே இதில் எளிதாக வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 20 ஓவருக்கு 106/8 ரன்கள் ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே வெறும் 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வீரர்கள்

வீரர்கள்

நேற்று போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட நன்றாக ஆடினார்கள். ஆனால் ரூத்துராஜ் மற்றும் ஷரத்துல் தாக்கூர் இருவரும் சரியாக ஆடவில்லை. முக்கியமாக ஷரத்துல் தாக்கூர் சரியாக பவுலிங் செய்யவில்லை. கடந்த போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை.

லென்த்

லென்த்

இவரின் பவுலிங்கில் சரியான லென்த் இல்லை. அதேபோல் ஒரே மாதிரியான வேகத்தில் இவர் பவுலிங் செய்தார். இவர் பவுலிங்கில் பெரிதாக வேரியேஷன் இல்லை. நேற்று இவர் பவுலிங்கில் மட்டும்தான் பஞ்சாப் வீரர்கள் அதிகம் அடித்தனர்.

எத்தனை ஓவர்

எத்தனை ஓவர்

4 ஓவர் வீசி 35 ரன்கள் கொடுத்தார். நேற்று 8 ஆர்ஆருக்கு அதிகமாக ரன்கள் கொடுத்தது இவர் மட்டுமே. எப்போதும் அதிகம் ரன் கொடுத்து கூடவே விக்கெட் எடுக்கும் ஷரத்துல் தாக்கூர் நேற்று விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதுதான் நேற்று இவர் விமர்சிக்கப்பட காரணம்.

ருத்துராஜ்

ருத்துராஜ்

இன்னொரு பக்கம் ருத்துராஜ் நேற்று சரியாக பேட்டிங் செய்யவில்லை. 16 பந்துகள் பிடித்து 5 ரன்களை மட்டுமே ருந்துராஜ் எடுத்தார். இவரின் ஆட்டம் இரண்டு போட்டிகளாக மோசமாக உள்ளது. இதனால் நேற்று இவர்கள் மீது தோனி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

விருப்பம்

விருப்பம்

தோனிக்கு இவர்களை அணியில் இருந்து தூக்கும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக நேற்று தோனி டிரெஸ்ஸிங் ரூமில் கோபமாக பேசியதாகவும், பயிற்சியில் இவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Saturday, April 17, 2021, 14:44 [IST]
Other articles published on Apr 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+