Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் தோனி.. கேப்டன்னா இப்படித்தான் பேசணும்.. தல சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ப்பா சூப்பர்!

சென்னை: சிஎஸ்கே அணியில் இளம் ஓப்பனிங் வீரர் ரூத்துராஜுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கேப்டன் தோனி அழகான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

Recommended Video

Dhoni விளக்கம் ! Ruturaj-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன்? | Oneindia Tamil

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடுகிறது. டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாஹர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக ஆடுகிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ரூத்துராஜுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கேப்டன் தோனி சிறப்பான விளக்கம் அளித்து இருந்தார். அதில், சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. அதே அணியுடன்தான் ஆட விரும்புகிறோம்.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

சிஎஸ்கே அணியில் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் பார்மில் இருக்கிறார்கள். வீரர்கள் நல்ல பந்தில் அவுட்டானால் அது தவறு இல்லை. கடந்த வருடம் ரூத்துராஜ் சிறப்பாக ஆடினார். பல உயரங்களையும், தாழ்வுகளையும் ரூத்துராஜ் கடந்த வருடம் எதிர்கொண்டார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

கடந்த வருடம் பல விஷயங்களை ரூத்துராஜ் கடந்து வந்தார். இரண்டு போட்டிகள் சரியாக ஆடாதது எல்லாம் கிரிக்கெட்டில் சகஜம். இதெல்லாம் கிரிக்கெட்டில் நடக்க கூடியதுதான். அவர் கொஞ்சம் மாற வேண்டும், மற்றபடி அவர் நல்ல வீரர்தான். கடந்த வருடம் இதேபோல் பிரஷர்களை அவர் கடந்து வந்து இருக்கிறார்.

பிரஷர்

பிரஷர்

நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாசிட்டிவாக பேசலாம். ஆனால் எல்லாமே களத்தில் ஆடும் வீரர்களில் கையில்தான் இருக்கிறது. ரூத்துராஜுக்கு தொடர்ந்து சிஎஸ்கே அணி ஆதரவு அளிக்கும் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இளம் வீரர் ரூத்துராஜ் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும்.. அவருக்கு ஆதரவாக தோனி பேசி இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Monday, April 19, 2021, 20:07 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+