Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க செஞ்ச தப்புதான்.. முன்னனி வீரர் மீது தோனி கடும் சாடல்.. சிஸ்கே தோல்விக்கான காரணம்!

டெல்லி: சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் டுப்ளசிஸ்தான் என கேப்டன் தோனி மறைமுகமாக சாடியுள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 218/4 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 219/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி டுபிளெசிஸ் 50, மொயின் அலியின் (58) அதிரடியால் சிறப்பான அடிதளம் பெற்றது. பின்னர் ராயுடு 7 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 72 விளாச 218 ரன்களை எட்டியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் காட்டிய அதிரடியால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

டுப்ளசிஸ் தவறு

டுப்ளசிஸ் தவறு

அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 87 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் ஐபிஎல் வரலாற்றி மும்பை அணி 2வது மிகப்பெரிய சேஷிங்கை செய்து அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் ஃபீல்டிங் சற்று மோசமாக இருந்தது.குறிப்பாக 18வது ஓவரில் பொல்லார்ட்டின் கேட்ச்சை டுப்ளசிஸ் தவறவிட்டது சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

தோனி

தோனி

தோல்வி குறித்து பேசிய தோனி, டெல்லி களம் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்தது. நாங்கள் சிறப்பான ஸ்கோரைதான் அடித்தோம். இது போன்ற களத்தில் பந்துவீசுவது எங்கள் பவுலர்களுக்கு கடினமான ஒன்று அல்ல. ஆனால் முக்கியக் கட்டங்களில் கேட்ச்களை கோட்டை விட்டோம். திட்டங்களை சரி செய்ய தவறவிட்டோம். இனி வரும் போட்டிகளில் அதனை பவுலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தவறு என்ன

தவறு என்ன

இது போன்ற பெரிய போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்பது சகஜம். அதில் இப்போட்டியும் ஒன்று. தோல்வி போன்ற கடினமான சூழலில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். புள்ளிப்பட்டியல் நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. ஒவ்வொரு போட்டியையும் முக்கியம் எனவே கருதி ஆடுகிறோம். அப்போதுதான் புள்ளிகள் தானாக உயரும் என தோனி தெரிவித்தார்.

Story first published: Sunday, May 2, 2021, 11:36 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+