For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-க்கு சிஎஸ்கே ரெடி.. அமீரகம் புறப்படும் தேதி வெளியானது.. தோனியின் அதிரடியை காண வாய்ப்பு!

சென்னை: ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவது குறித்து அதன் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 14வது ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்தும் ஏற்பாடுகளில் பிசிசிஐ மும்முரமாக உள்ளது.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தினால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் போட்டியே அதிரடி

முதல் போட்டியே அதிரடி

சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவிட்டால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடைசி லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

 ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் அதற்கான ஏற்பாடுகளில் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் அணிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று முன்னேற்பாடுகள், பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனக்கூறியுள்ளது. அப்படி பார்த்தால் ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணியாக கருதப்படும் சிஎஸ்கேவில் வீரர்கள் பலரும் தற்போது ஓய்வில் உள்ளனர். பல்வேறு வீரர்கள் சர்வதேச தொடர்கள் எதிலும் பங்கேற்காமல் உள்ளனர். எனவே அவர்கள்தான் முதலில் அமீரகம் செல்வார்கள் எனக்கூறப்படுகிறது.

சென்னை அணி அப்டேட்

சென்னை அணி அப்டேட்

இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கொடுத்துள்ளார். பதிரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிசிசிஐ ஆகஸ்ட் 10ம் தேதிக்கு மேல் அமீரகம் செல்ல அனுமதித்துள்ளது. எனவே ஆகஸ் 14 அல்லது 15ம் தேதிகளில் சென்னை அணி அமீரகத்திற்கு புறப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனத்தெரிவித்துள்ளார்.

ஓட்டல் அறைகள்

ஓட்டல் அறைகள்

முன்னதாக கொரோனா லாக்டவுன் குறித்து பேசியிருந்த அவர், ஹோட்டல்கள் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பிசிசிஐ எப்போது ஐபிஎல் தேதிகளை அறிவிக்கின்றதோ, உடனடியாக நாங்களும் பணிகளை தீவிரப்படுத்திவிடுவோம் எனக்கூறியிருந்தார். எனவே கடந்த முறை தங்கியிருந்த அதே ஓட்டல் அறையில் தான் சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத்தெரிகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது குடும்பத்தினருடன் ஜாலி டூர் சென்று வருகிறார். அவரின் அதிரடி ஆட்டத்தை முதல் பாதி தொடரில் ரசிகர்கள் மிஸ் செய்தனர். எனவே 2வது பாதியிலாவது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற, முன்னதாகவே அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 சூப்பர் கம்பேக்

சூப்பர் கம்பேக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் மிக மோசமாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத அந்த அணி இந்தாண்டு அசுரத்தனமான கம்பேக்கை கொடுத்துள்ளது.

முதல் போட்டியே அதிரடி

முதல் போட்டியே அதிரடி

செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. எனவே 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதிக்குமா என சென்னை ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Story first published: Thursday, August 5, 2021, 14:11 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
IPL 2021: CSK CEO Kasi viswanathan announce team to depart for UAE next weekend,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+