Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த போட்டோவிற்கு அர்த்தம் என்ன? சிஎஸ்கேவில் இன்று முக்கிய வீரருக்கு டாட்டா.. தோனி மாஸ்டர் பிளான்!

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான ஒரு வீரர் மட்டும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

CSK-வில் இன்று முக்கிய வீரருக்கு டாட்டா.. Dhoni's Plan | Oneindia Tamil

ராஜஸ்தானுக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்க உள்ளது.

ராஜஸ்தான், சென்னை இரண்டு அணிகளும் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக இருக்கும்,.

முக்கியம்

முக்கியம்

இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் பெரும்பாலும் ரூத்துராஜ் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர் கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக ஆடவில்லை. இரண்டு போட்டிகளில் மொத்தமாக இவர் எடுத்த ரன்னே 10 ரன்கள்தான்.

எவ்வளவு ரன்கள்

எவ்வளவு ரன்கள்

முதல் போட்டியில் 5 ரன்கள், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் என்று மிக மோசமாக ஆடி இவர் சொதப்பினார். இவர் தற்போது பார்மில் இல்லை. அதேபோல் இவர் வலைப்பயிற்சியில் சரியாக ஆடுவது இல்லை. இன் ஸ்விங் பந்துகளை ஆட முடியாமல் கடுமையாக இவர் திணறுகிறார்.

இன் ஸ்விங்

இன் ஸ்விங்

வலைப்பயிற்சியிலும் இவர் மோசமாக சொதப்பிய காரணத்தால், இன்று இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். ராஜஸ்தான் அணியிடம் நல்ல பாஸ்ட் பவுலிங் வீரர்கள் உள்ளனர். முக்கியமாக இன் ஸ்விங் பவுலர்கள் உள்ளனர். இதனால் அந்த அணியிடம் ரூத்துராஜ் ஆடுவது கடினம்.

உத்தப்பா

உத்தப்பா

இதன் காரணமாக உத்தப்பா அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். உத்தப்பா தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். இதனால் இவரை ஓப்பனிங் இறக்க தொனி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

க்ளூ

நேற்று சிஎஸ்கே அணியின் டிவிட்டர் பக்கத்தில் உத்தப்பாவின் புகைப்படம் வெளியாகி இருந்தது. உத்தப்பா சிக்ஸ் அடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டது. இதை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் பலர்.. இன்று கண்டிப்பாக உத்தப்பா ஆட வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் கொடுக்கும் க்ளூதான் இது என்று கூறி வருகிறார்கள்.

Story first published: Monday, April 19, 2021, 9:20 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+