Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரள வைத்த சாகர்.. தூசி தட்டிய அலிபாய்.. பஞ்சாப்பை வீழ்த்தி.. முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

மும்பை: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.

Recommended Video

Punjab Kingsஐ பஞ்சர் ஆக்கிய Super kings | CSK won by 6 Wickets | Oneindia Tamil

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடந்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை இன்று எப்படியாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தில் களமிறங்கியது.

மும்பை வான்கடே மைதானத்தில டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 20 ஓவருக்கு 106/8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே வெறும் 15.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ்

டாஸ்

இதனால் இன்றும் சென்னையின் பவுலிங்கை பஞ்சாப் வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் டாஸ் தோற்ற நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

பிட்ச் மாற்றம்

பிட்ச் மாற்றம்

இன்று நடக்கும் போட்டியில் கொஞ்சம் வித்தியாசமான பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளது. இன்று பெரிய அளவில் பந்து வேகமாக வராது. இதனால் வித்தியாசமான பவுலிங் வெரைட்டிகளை காட்டும் அணி கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. நேற்று நடந்த போட்டியும் கிட்டத்தட்ட இதேபோன்ற பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடும். டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று பஞ்சாப்பிற்கு எதிராக ஆடுவார்கள்.

பஞ்சாப்

பஞ்சாப்

இன்று ஆடும் பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், ஷாருக்கானை, ஜெய் ரிச்சர்ட்ஸன், முருகன் அஸ்வின், ரைலி மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

இத்தையடுத்து பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். அதன்பின் ராகுல் ரன் அவுட் செய்யப்பட்டார். பின் கெயில் 10 ரன்கள், தீபக் ஹூடா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். நிக்கோலஸ் பூரான் டக் அவுட் ஆனார். தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் மட்டும் கொஞ்சம் அதிரடியாக ஆடினார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

36 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 47 ரன்கள் எடுத்து ஷாருக்கான் அவுட் ஆனார். பஞ்சாப் அணியில் வேறு வீரர்கள் யாருமே சரியாக ஆடவைல்லை. சிஎஸ்கேவில் அதிரடியாக பவுலிங் செய்த சாகர் 4 விக்கெட் எடுத்தார். முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 20 ஓவருக்கு 106/8 ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கேவிற்கு பஞ்சாப் அணி 107 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியில் ரூத்துராஜ், டு பிளசிஸ் நிதானமாக ஆடினார்கள். ரூத்துராஜ் சரியாக அடிக்க முடியாமல் கடுமையாக திணறினார். இவரின் பேட் சரியாக பந்தை மீட் செய்யவில்லை. 16 பந்துகள் பிடித்த 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

அலி

அலி

ஆனால் அதன்பின் இறங்கிய மொயின் அலி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். இரண்டாவது பாலில் இருந்தே பவுண்டரி அடித்தவர் சரியான இடைவெளியில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். 31 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயின் அலி அவுட் ஆனார். இதையடுத்து டு பிளசிஸ் தொடர்ந்து ஆடி மேட்சை முடித்தனர். சிஎஸ்கே வெறும் 15.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 2021 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Story first published: Friday, April 16, 2021, 22:41 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+