Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர்களே இல்லை.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெறுமா?

மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் இன்று சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகிறது.

புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ள இந்த இரண்டு அணிகளும், வெற்றி பெறுவதற்காக அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

சென்னை அணி

சென்னை அணி

இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்காக இன்று 2 மாற்றங்கள் அணியில் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்ட மொயின் அலிக்கு பதிலாக இம்ரான் தாஹீரும், லுங்கி நெகிடிக்கு பதிலாக டுவைன் பிராவோவும் களமிறங்கவுள்ளனர்.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

ருத்ராஜ் கெயிக்வாட், டுப்ளசிஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரண், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், இம்ரான் தாஹீர்,

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

இதுவரை எந்த அணியாலும் வீழ்த்த முடியாத ஆர்சிபி அணி இன்றைய போட்டியிலும் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது. இதற்காக அந்த அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக டேன் கிறிஸ்டியனும், சபாஷ் அஹ்மதுக்கு பதிலாக சைனிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

விராட் கோலி, தேவ்தத் படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெயில் ஜேமிசன், ஹர்சல் பட்டேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுவேந்திர சஹால்.

Story first published: Sunday, April 25, 2021, 21:06 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+