வேண்டவே வேண்டாம்.. ஒரேயடியாக "நோ" சொன்ன தோனி.. தடாலடி முடிவு.. பிளானிலிருந்து பின்வாங்கும் சிஎஸ்கே!
சென்னை: சிஎஸ்கே அணி இந்த வருடமும் எந்த வீரர்களையும் பிற அணிக்கு டிராஸ்ன்பர் செய்யாது என்று தகவல்கள் வருகின்றன.
Recommended Video
2021 ஐபிஎல் தொடருக்கான டிரான்ஸ்பர் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த விண்டோ முறை மூலம் பிற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை பாதி தொடரில் டிரான்ஸ்பர் செய்ய முடியும்.
ஒரு அணியில் 3 போட்டிக்கும் குறைவாக ஆடி இருக்கும் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும். வெளிநாட்டு வீரர்கள்தான் பொதுவாக இப்படி டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள்.

டிரான்ஸ்பர்
எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த வருடம் பெரிய அளவில் வீரர்கள் அணி மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

தகவல்
கொரோனா காரணமாக இதுவரை 5 க்கும் அதிகமான வீரர்கள் வெளியேறி உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் தொடரை புறக்கணித்து உள்ளனர். இதனால் இந்த வருடம் பல அணிகள் டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தி புதிய வீரர்களை தங்கள் அணியில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எந்த வீரர்களையும் டிரான்ஸ்பர் மூலம் எடுக்காது என்கிறார்கள். சிஎஸ்கே முதலில் ஒரு வீரரை டிரான்ஸ்பர் செய்யும் திட்டத்தில் இருந்துள்ளது. ஆனால் தோனி இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தோனி முடிவு
யாரையும் புதிதாக எடுக்க வேண்டாம், யாரையும் வெளியேவும் அனுப்ப வேண்டாம். இதே அணி இருக்கட்டும் என்று தோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே மொத்தமாக டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications