Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘வாத்தி கம்மிங்’.. வார்னரின் மகள்கள் போட்ட குத்தாட்டம்.. கமெண்டை வீசும் ரசிகர்கள் - வீடியோ!

சிட்னி: டேவிட் வார்னர் மட்டுமின்றி அவரது மகள்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் அமீரகத்தில் ஒன்றிணைந்து வருகிறது.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள எந்தவித சிக்கலும் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து தமிழக ரசிகர்களுக்கு இப்போது இருந்தே ட்ரீட் கொடுத்துள்ளார் வார்னர்.

 வார்னரின் இன்ஸ்ட சேட்டை

வார்னரின் இன்ஸ்ட சேட்டை

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த டிக்டாக் வீடியோக்களால் பெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாக இந்திய பாடல்கள், மற்றும் திரைப்பட காட்சிகளுக்கு டிக் டாக் செய்து இந்தியர்களின் மனதை வென்றார்.

 மீண்டும் டிக்டாக்

மீண்டும் டிக்டாக்

தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வரும் டேவிட் வார்னர், சமீபத்தில் தனுஷின் ரவுடி பேபி, ராமுலோ ராமுலா போன்ற பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்து டான்ஸர் அவதாரம் எடுத்துள்ளார்.

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், டேவிட் வார்னரின் மகள் இரண்டு பேர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் டிக்டாக்கில் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, வார்னரும் ஏற்கனவே இந்த பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். தற்போது அவரின் மகள்கள் விஜய் ரசிகர்களைகளாக மாறியுள்ளனர்.

 ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அந்த பாடலில் நடிகர் விஜய் போடும் அதே டான்ஸ் ஸ்டெப்புகளை போன்றே வார்னரின் மகள்களும் முயற்சி செய்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு குழந்தைகளும் மிக அழகாக நடனம் ஆடுகிறார்கள் வார்னர் என ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 மீண்டும் ஐபிஎல்

மீண்டும் ஐபிஎல்

ஐபிஎல் தொடருக்கு பிறகு டேவிட் வார்னர் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணியுடனான தொடர்களில் ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற வீரர்கள் 6 முக்கிய வீரர்கள் இந்த தொடர்களில் வாய்ப்பு தரப்படவில்லை. அதில் டேவிட் வார்னரும் ஒருவர். இந்த சூழலில், அவர் ஐபிஎல் தொடரின் 2வது பாதியில் பங்கேற்க விரைவில் அமீரகம் செல்லவுள்ளார். இந்த ஐபிஎல் தொடர்தான் டி20 உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக விளையாட பயிற்சியாக அமையும்.

Story first published: Tuesday, August 24, 2021, 20:25 [IST]
Other articles published on Aug 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+