
கொல்கத்தா அணி
இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக டாப் ஆர்டர் சொதப்பல்கள் பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கும் சுப்மன் கில், நிதிஷ் ராணா ஜோடி சிறப்பான தொடக்க தராமல் வெளியேறுவதால் பின்னால் வரும் வீரர்களுக்கு கடும் பிரஷர் விழுகிறது.
இதனால் இந்த போட்டியில் அவர்களுக்கு பதிலாக ராகுல் திரிப்பாதி - சுனில் நரேன் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் ரிஸ்க் எடுத்துள்ளது கொல்கத்தா அணி. இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் மோர்கன் எங்கள் ப்ளேயின் 11 சிறப்பாக உள்ளதாக கருதுகிறேன் எனவே மீண்டும் ஒரு வாய்ப்பை எடுத்துள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.

ப்ளேயிங் 11 :
சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரேன், இயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி

டெல்லி கேப்பிடல்ஸ்
இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி அணி 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய சீனியர் அமித் மிஸ்ரா காயம் காரணமாக ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அமித் மிஸ்ரா இல்லாமல் அந்த அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ப்ளேயிங் 11:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட்மேயர், அக்ஷர் பட்டேல், லலித் யாதவ், ரபாடா, இஷாந்த் சர்மா, ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications