Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றாக விளையாடிய வீரரை திடீரென நீக்கிய மும்பை.. டெல்லி அணிக்கு எதிராக முக்கிய மாற்றம்.. திட்டம் என்ன

சார்ஜா: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் அதிரடியான ப்ளேயிங் 11-உடன் களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ப்ளே ஆஃப் விறுவிறுப்பு

ப்ளே ஆஃப் விறுவிறுப்பு

இந்தாண்டு ஐபிஎல்-ல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே அதிகாரர்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. இதனால் நான்காவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்க முடியும். அதே போல இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப்-க்கு முன்னேறும். எனவே இரு அணிகளும் கடுமையான போராட்டத்தை இன்று கொடுக்க காத்திருக்கிறது.

மும்பை அணி மாற்றம்

மும்பை அணி மாற்றம்

டெல்லி அணிக்கான போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளேயிங் 11ல் எந்தவித பெரிய மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் அதே அணியை வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. பந்துவீச்சில் மட்டும் ராகுல் சஹாருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11 என்ன?

ப்ளேயிங் 11 என்ன?

ரோகித் சர்மா, குயிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருணால் பாண்ட்யா, நாதன் கோல்டர் நைல், ஜெயந்த யாதவ், பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Recommended Video

Mumbai Indians declares Hardik Pandya won’t bowl this year | OneIndia Tamil
டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக இந்த போட்டியில் பலமான ப்ளேயிங் 11-உடன் வந்துள்ளது. டெல்லி அணியின் ப்ளேயிங் 11-ல் பந்துவீச்சில் மட்டும் லலித் யாதவுக்கு பதிலாக மீண்டும் பிரித்வி ஷா கொண்டு வரப்பட்டுள்ளார். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்வி ஷா மீண்டும் முழு ஃபார்முடன் களமிறங்குகிறார்.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சிம்ரான் ஹெட்மெயர், அக்‌ஷர் படேல், அஸ்வின், ரபாடா, ஆவேஷ் கான், ஆன்ரிச் நார்ட்ஜே

Story first published: Saturday, October 2, 2021, 19:20 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+