அவரால் ஆட முடியாதாம்.. இரவோடு இரவாக ரோஹித்துக்கு சென்ற "பேட்-நியூஸ்".. மும்பைக்கு வைக்கப்பட்ட செக்!
சென்னை: பெங்களூருக்கு எதிராக இன்று முதல் ஐபிஎல் போட்டியை ஆட இருக்கும் மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. பெங்களூர் மும்பை அணிகளுக்கு இடையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் முதல் மேட்ச் நடக்கிறது.
பெங்களூர் அணியில் இந்த சீசனில் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின், கைலி ஜாமிசன் போன்ற புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,. இதனால் கண்டிப்பாக பெங்களூர் அணி இன்று ஸ்விட் சர்ப்ரைஸ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எப்படி
இந்த நிலையில் மும்பை அணி எப்போதும் போல வலுவாக இருக்கிறது. அணியில் இருக்கும் 11 பேரும் சரி, பெஞ்சில் இருக்கும் வீரர்களும் சரி. எல்லோரும் மிகவும் வலுவாகவே இருக்கிறார்கள். இதனால் பெங்களூர் அணிக்கு மும்பை மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

சவால்
இந்த நிலையில் மும்பை அணியில் இன்று ஓப்பனிங் வீரர் டி காக் இறங்குவது சந்தேகம் என்கிறார்கள். இவர் கடந்த வாரம் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டார். அதன்பின் பாதி தொடருக்கு இடையில் ஐபிஎல் ஆடுவதற்காக சென்னைக்கு வந்தார்.

மோசம்
ஆனால் இவரின் கொரோனா குவாரன்டின் இன்னும் முடியவில்லை. இதனால் அவர் பெரிதாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. எனவே அவர் இன்று மும்பை அணியில் ஆட முடியாது. நேற்று இவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை.

முடியாது
இதனால் டி காக் இன்று ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மும்பை அணியில் இஷான் கிஷான் அல்லது கிறிஸ் லைன் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது .


Click it and Unblock the Notifications