Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டிரம்ப் கார்ட்".. தட்டி தூக்கிய சாகர்.. பஞ்சாப் டாப் ஆர்டரை காலி செய்த மேஜிக்.. எப்படி நடந்தது?

மும்பை: பஞ்சாப்பிற்கு எதிராக மும்பையில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே பவுலர் சாகர் 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

பிட்ச் தொடக்கத்தில் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும், போக போக பனி வந்துவிடும் என்பதால் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இன்று சிஎஸ்கே அணி எந்த மாற்றமும் இல்லாமல், அதே பழைய அணியோடு களமிறங்கியது.

எப்படி

எப்படி

கடந்த போட்டியில் சரியாக ஆடாத சாகர் மீது இந்த போட்டியில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த போட்டியில் சாகர் அதிகமாக லெக் சைடில் வீசினார். அதேபோல் பெரிதாக ஆப் சைடில் வீசவில்லை. இன்னொரு பக்கம் சாகர் பெரிதாக ஸ்விங் செய்யவில்லை.

மோசம்

மோசம்

இன்னொரு பக்கம் அவர் பெரிதாக பவுன்சரும் செய்யவில்லை. இதனால் சாகரை நீக்க வேண்டும், அவரை அணியில் எடுக்க கூடாது என்றது கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனால் அவர் மீது கடுமையான பிரஷர் வைக்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சாகர் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் கொடுத்தார். தனது முதல் ஓவரிலேயே சிறப்பான லென்தில் வீசினார். ஆப் சைடில் தொடர்ந்து இவர் பவுலிங் செய்து பஞ்சாப் டாப் ஆர்டர் வீரர்களுக்கு பிரஷர் கொடுத்தார். ஆப் சைடில் ஸ்விங் ஆகும் பந்தை பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் அடிக்க முடியாது.

எத்தனை வெரைட்டி

எத்தனை வெரைட்டி

ஒரே ஓவரில் ஆப் சைடில் வீசியது மட்டுமின்றி பவுன்சர் பந்துகளையும் வீசி, அழுத்தம் கொடுத்தார். முதல் ஓவரிலேயே பிட்சை பயன்படுத்தி சாகர் பந்தை முடிந்த அளவு ஸ்விங் செய்தார். கடந்த போட்டியிலும், முந்தைய வருடமும் சாகரிடம் இந்த ஸ்விங் மேஜிக்தான் மிஸ் ஆனது.

மீண்டும் ஓவர்

மீண்டும் ஓவர்

சாகர் இன்று முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தார். இதனால் பவர் பிளே முடிந்ததும் மீண்டும், சாகருக்கு தோனி ஓவர் கொடுத்தார். இவர் தனது கடைசி ஓவரை 6வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் சாகர் 4வது விக்கெட்டை எடுத்தார். கடந்த போட்டியில் இவர் மீது வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களுக்கு எல்லாம் இந்த போட்டியில் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Friday, April 16, 2021, 20:21 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+