Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்திலேயே காதல் ப்ரோபோஸ் செய்த தீபக் சஹார்.. அரங்கம் அதிர உற்சாகம்.. பெண் கூறிய சுவாரஸ்ய பதில்!

அமீரகம்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், ஒரு பெண்ணிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி சொதப்பியது.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

சென்னை அணியின் ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், அதிரடியாக ஆட முயன்று 12 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் வந்த மொயின் அலி 0 (6), ராபின் உத்தப்பா 2 (6), அம்பத்தி ராயுடு 4 (5), தோனி 12 (15) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். மறுமுணையில் நிலையாக நின்றிருந்த டூப்ளசிஸ் பொறுப்புடன் விளையாடினார். 55 பந்துகளை சந்தித்த அவர் 76 ரன்களை சேர்த்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த ஜடேஜா 15 ரன்கள் அடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. ஒருபுறம் மயங்க் அகர்வால் (12), சர்ஃபராஸ் கான் (0), சாருக்கான் (8), மார்க்ரம் (13) அடுத்தடுத்து வெளியேறினாலும், மறுமுனையில் தூணாக நின்றிருந்த கே.எல்.ராகுல் சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் 98 ரன்களை விளாசினார். இதனால் 13 ஒவர்களிலேயே 139 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.

காதலை வெளிப்படுத்திய சஹார்

காதலை வெளிப்படுத்திய சஹார்

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர் தீபக் சஹார் செய்த விஷயம் அனைவரின் மனதையும் வென்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு திடீரென ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்ற தீபக் சஹார் அங்கிருந்த அயல்நாட்டு பெண்மணி ஒருவரிடம், தான் வைத்திருந்த மோதிரத்தை நீட்டி, மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். இதனால் அரங்கமே திடீரென ஆச்சரியப்பட்டது. மேலும் அனைவரும் அந்த பெண்மணி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

என்ன பதில் வந்தது

என்ன பதில் வந்தது

ஆனால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த இளம் பெண் தீபக் சஹாரின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் கையில் வைத்திருந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் கட்டியணையத்ததும், அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகமூட்ட, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இது மாறியது.

Story first published: Thursday, October 7, 2021, 19:53 [IST]
Other articles published on Oct 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+