இப்போதே தொடங்கிய போட்டி.. சிஎஸ்கே போட்டு வைத்த முக்கிய திட்டம்.. முந்திக்கொண்ட மும்பை இந்தியன்ஸ்!
அபுதாபி: ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி முக்கிய திட்டம் போட்டு வைத்திருந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி முந்திக்கொண்டுள்ளது.
Recommended Video
14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொரோனா உறுதியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதுவரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு.

ஐபிஎல் தொடர்
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

முன்னேற்பாடுகள்
ஐபிஎல்-க்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அதற்கான முதற்கட்ட பணிகளில் அணி நிர்வாகங்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் முதலில் பயிற்சி முகாமை தொடங்கும். அதன்படி இந்தாண்டு சிஎஸ்கே தான் முதலில் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தது. தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு தனி விமானம் மூலம் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமீரகம் பறந்த மும்பை
இந்நிலையில் சிஎஸ்வை முந்திக்கொண்டு சைலண்டாக அமீரகம் சென்றுவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. வீரர்களை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்பரேட் பார்க்கில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி கொடுத்து வந்த நிர்வாகம், இன்று அவர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் தனி விமானத்தில் அமீரகம் அனுப்பியுள்ளது. எனவே அமீரகம் சென்றால் பபுள் டூ பபுள் மாற்றமே இருக்கும்.

குவாரண்டைன் விதிமுறை
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அபுதாபியில் முகாமிட்டு ஒரு மாத காலம் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக முதலில் அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அந்த 6 நாட்களில் 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டீவ் என முடிவும் வந்தால் மட்டுமே ஐபிஎல்-க்கான பயோ-பபுளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

எந்த ஓட்டல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டல்களை புக் செய்வதில் இந்த முறையும் பிசிசிஐ அறிவுரை கூறியுள்ளது. அதன்படி சிறிய ஓட்டல்களாக புக் செய்துவிட்டால், ஓட்டல் முழுவதையும் பயோபபுள் சூழலுக்கு கொண்டு வரப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். இதுவே பெரிய ஓட்டலாக இருந்தால், குறிப்பிட்ட தளம் அல்லது கட்டடம் முழுவதையும் புக் செய்து அதனை பயோ பபுள் சூழலுக்கு கொண்டு வரவேண்டும். எனக்கூறப்பட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் கடந்த2020ம் ஆண்டு சீசனில் தங்கியிருந்த ஹோட்டலில் மீண்டும் தங்குகின்றனர். மற்ற 6 அணிகளும் புதிதாக ஹோட்டலில் புக் செய்து தங்குகின்றனர்.

சென்னை அணி
மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவுள்ளனர். சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் பலர் சென்னைக்கு ஏற்கெனவே வந்துவி்ட்ட நிலையில் இன்று இரவு எப்படியும் அவர்கள் கிளம்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications