‘மும்பை அணிக்கு இருக்கு.. ஆனால் சிஎஸ்கேவுக்கு கொடுக்கல’.. கொரோனா பாதுகாப்பில் பாரபட்சமா? முழு விவரம்
அபுதாபி: ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கொரோனா பாதுகாப்பிற்காக உச்சகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Recommended Video
14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொரோனா உறுதியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதுவரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர்
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

அமீரகம் பறந்த மும்பை
இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். வீரர்களை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்பரேட் பார்க்கில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி கொடுத்து வந்த நிர்வாகம், சமீபத்தில் அவர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் தனி விமானத்தில் அமீரகம் அனுப்பியுள்ளது. .

குவாரண்டைன் விதிமுறை
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அபுதாபியில் முகாமிட்டு ஒரு மாத காலம் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக முதலில் அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அந்த 6 நாட்களில் 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டீவ் என முடிவும் வந்தால் மட்டுமே ஐபிஎல்-க்கான பயோ-பபுளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கண்காணிப்பு வாட்ச்
இந்நிலையில் குவாரண்டை நாட்களின் போது மும்பை வீரர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை பயோ பபுள் விதிமுறைகளை மீறியதன் காரணமாகவே ஐபிஎல்-ல் கொரோனா பரவியது. எனவே இந்த முறை பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் எங்கும் சென்றுவிடக்கூடாது என்பதை கண்காணிக்க அபுதாபியின் சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை கொடுத்துள்ளது.

சென்னை அணிக்கு இல்லை
மும்பை அணியை போலவே சிஎஸ்கே அணியினரும் அமீரகம் சென்றடைந்து விட்டனர். அவர்கள் அனைவரும் துபாயில் உள்ள ஓட்டலில் குவாரண்டைன் செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மும்பை அணி வீரர்களுக்கு கொடுத்ததை போல சிஎஸ்கே வீரர்களுக்கு எந்தவித வாட்ச்-ம் கொடுக்கப்படவில்லை. அரசாகம் சார்பில் எந்தவித தகவலும், ஜிபிஎஸ் டிராக்கர் வாட்ச் குறித்து வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஓட்டல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டல்களை புக் செய்வதில் இந்த முறையும் பிசிசிஐ அறிவுரை கூறியுள்ளது. அதன்படி சிறிய ஓட்டல்களாக புக் செய்துவிட்டால், ஓட்டல் முழுவதையும் பயோபபுள் சூழலுக்கு கொண்டு வரப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். இதுவே பெரிய ஓட்டலாக இருந்தால், குறிப்பிட்ட தளம் அல்லது கட்டடம் முழுவதையும் புக் செய்து அதனை பயோ பபுள் சூழலுக்கு கொண்டு வரவேண்டும். எனக்கூறப்பட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் கடந்த2020ம் ஆண்டு சீசனில் தங்கியிருந்த ஹோட்டலில் மீண்டும் தங்குகின்றனர். மற்ற 6 அணிகளும் புதிதாக ஹோட்டலில் புக் செய்து தங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications