Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தை மாற்றிய சப்ஸ்டிட்யூட் வீரர்.. ஒரே ஒரு பந்தால் வந்த விணை.. டெல்லியுடன் சிஎஸ்கே போராடி தோல்வி

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியை ஒரே ஒரு பந்தில் இருந்த சொதப்பலால் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 16 ரன்களை விளாசியது. ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் அதிரடி காட்டினர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் டூப்ளசிஸ் சிக்ஸர் அடிக்க முயன்ற போது சுலபமான கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

சென்னை அணியில் ஓப்பனிங் வீரர்கள் 13 (13), டூப்ளசிஸ் 10 (8) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களுக்கும் நடையை கட்டினர். மறுமுணையில் நிதானமாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு ஒற்றை ஆளாக போராடி அணியை மீட்டார். 43 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் என 55 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது.

சுலபமான இலக்கு

சுலபமான இலக்கு

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கமே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இளம் வீரர் பிரித்வி ஷா 12 பந்துகளில் 18 ரன்களை விளாசி அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் துரதிஷ்டவசமாக 2 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுணையில் ஷிகர் தவான் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அந்த அணி 6 ஓவர்களுக்குள் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை கடந்தது.

சிம்ரான் ஹெட்மெயர்

சிம்ரான் ஹெட்மெயர்

ஆனால் இதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஷிகர் தவான் 39 (35), ரிஷப் பண்ட் 15 (12), ரிபல் படேல் 18 (20) அஸ்வின் 2 (3) என அனைவரும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சிம்ரான் ஹெட்மெயர் தலைவலி கொடுத்தார்.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

அப்போது ஆட்டத்தின் 18வது ஓவரில் பிராவோ வீசிய 3வது பந்தில் ஹெட்மெயர் கேட்ச் கொடுத்தார். ஆனால் சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக இருந்த கிருஷ்ணப்பா கவுதம் அதனை தவறவிட்டார். அதனால் 2ம் வாய்ப்பு பெற்ற ஹெட்மெயர் பவுண்டரிகளை வீச கடைசி ஓவரில் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் 19.4 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை சேர்த்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் மீண்டும் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

Story first published: Tuesday, October 5, 2021, 9:04 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+