Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாக்.. அடித்து துவைத்து காயப்போட்ட டெல்லி.. சரண்டர் ஆன சிஎஸ்கே பவுலிங்.. முதல் போட்டியில் படுதோல்வி

மும்பை: சிஎஸ்கேவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடியாக ஆடி வென்றுள்ளது. அதிரடியாக பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.

மும்பையில் நடந்த இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் பண்ட் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் டெல்லி சென்னை அணிகளுக்கு இடையில் மும்பையில் இன்று ஆட்டம் நடந்தது.

டெல்லி

டெல்லி

இன்று டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு செய்தது. மும்பையில் தற்போது பனி பெய்து வருகிறது. போக போக பனி அதிகரிக்கும். இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்ய கஷ்டமாக இருக்கும். இதனால் டெல்லி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

டாஸ்

டாஸ்

நேற்று கோலி எடுத்த முடிவு போலவே இன்று பண்டும் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய பண்ட், விக்கெட் பிளாட்டாக இருக்கிறது. அதனால் பவுலிங் தேர்வு செய்தேன் என்று குறிப்பிட்டார். டாஸ் குறித்து பேசிய கேப்டன் தோனி, நான் டாஸ் வென்று இருந்தாலும் பவுலிங்தான் தேர்வு செய்து இருப்பேன்.

கஷ்டம்

கஷ்டம்

இங்கே ஸ்கோரை டிபன்ட் செய்வது கஷ்டம். பனி அதிகமாக இருப்பதால் கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் மேக மூட்டம் இருப்பதால் நிலைமை எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றார். இன்று ஆடும் சென்னை அணியில் ரூத்துராஜ், அம்பதி ராயுடு, டு பிளசிஸ், ரெய்னா, எம் எஸ் தோனி, மொயின் அலி, ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தாக்கூர், சாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி

டெல்லி

இன்று ஆடும் டெல்லி அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரஹானே, பண்ட், ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவ்ஸ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பேட்டிங்

பேட்டிங்

இன்று சிஎஸ்கே பேட்டிங் இறங்கி தொடக்கத்தில் ரூத்துராஜ், டு பிளசிஸ் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் ரெய்னா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என்று அடுத்தடுத்து அதிரடியாக ஆடினார். யார் அவுட் ஆனாலும் பரவாயில்லை அடித்து வெளுப்போம் என்று திட்டம் போட்டு அடித்தனர். அதிலும் ரெய்னாவும், சாம் கரனும் திட்டமிட்டு அடித்து துவைத்தனர்.

ரன்கள்

ரன்கள்

ரெய்னா வெறும் 36 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். அதன்பின் ஜடேஜா 26, ராயுடு 23, மொயின் அலி 36 என்று கலக்கினார். கடைசியில் அதிரடி காட்டிய சாம் கரன் வெறும் 15 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லிக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்தது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய டெல்லி அணி ஆரம்பித்தில் இருந்து அதிரடி காட்டியது. டெல்லியின் ஒரு விக்கெட்டை வீழ்த்தவே சென்னை படாதபாடு பட்டது. அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். அதோடு இன்னொரு பக்கம் தவானும் 77 ரன்கள் எடுத்து வெளுத்து வாங்கினார். சிஎஸ்கே பவுலர்கள் எப்படி போட்டும் விக்கெட் விழவில்லை.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இதில் சிஎஸ்கே அணி 2 கேட்சை வேறு மிஸ் செய்தது. 10 ஓவரிலேயே ஆட்டம் சிஎஸ்கே கையை விட்டு போய்விட்டது. கடைசி வரை அதிரடியாக பேட்டிங் செய்த டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. 18.3 ஓவரில் டெல்லி அணி 189 ரன்கள் எடுத்து வென்றது.

Story first published: Saturday, April 10, 2021, 23:11 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+