For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திமிராக இருக்காதீர்கள்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்து.. போட்டிக்கு பின் ஒரேயடியாக விளாசிய தோனி.. ஏன்?

சென்னை: சிஎஸ்கே வீரர்கள் எவ்வளவு ரன்களை குவித்தாலும் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், திமிராக செயல்பட கூடாது என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Dhoni வெச்ச நம்பிக்கை Ruturaj Gaikwad விமர்சனங்களுக்கு செம்ம பதிலடி| Oneindia Tamil

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே திரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அதிரடியாக ஆடி 220 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தோனி

தோனி

இந்த நிலையில் இந்த போட்டிக்கு பின் பேசிய கேப்டன் தோனி, இது போன்ற ஆட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் டிவிஸ்ட் நடக்கலாம். இதெல்லாம் சகஜம். 16வது ஓவரில் இருந்தே பாஸ்ட் பவுலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையில்தான் மோதல் இருந்தது.

இருவர்

இருவர்

இருவரில் யார் நன்றாக வீசுவார்கள் என்ற நிலை இருந்தது. உங்களால் நிறைய விஷயங்களை செய்ய முடியாது. வித்தியாசமான பீல்டிங்கை நிற்க வைக்க முடியாது. எந்த அணி சிறப்பாக திட்டங்களை வகுக்கிறதோ அந்த அணிதான் கடைசியில் வெற்றிபெறும்.

கொஞ்சம் விக்கெட்

கொஞ்சம் விக்கெட்

அவர்களிடம் கொஞ்சம் விக்கெட்டுகள் கூடுதலாக இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் கிரிக்கெட்டில் நிறைய பார்த்துவிட்டோம். நிறைய ஸ்கோர் அடித்துவிட்டோம் என்ற மிதப்பில் இருக்க கூடாது. நாம் ஒரு ஸ்கோர் எடுத்தால் அதை எதிரணியும் எடுக்க முடியும்.

மிதப்பு

மிதப்பு

இதனால் மிதப்பில் இல்லாமல் தாழ்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதிக ஸ்கோர் அடித்தாலும் திமிராக இருக்க வேண்டாம் என்பதே டீம் மெம்பர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை. நாங்கள் ஆரம்பித்திலேயே நிறைய விக்கெட்டை எடுத்தோம்.

ஹிட்டர்கள்

ஹிட்டர்கள்

ஆனாலும் பிக் ஹிட்டர்கள் அதன்பின்தான் களமிறங்கினார்கள். அவர்கள் அடித்துதான் ஆடுவார்கள். அதை மாற்ற முடியாது. நம்மால் அதை எதுவும் செய்ய முடியாது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

ஏன்

ஏன்

நேற்று சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் 220 எடுத்த காரணத்தால் கொஞ்சம் மேம்போக்காக காணப்பட்டனர். எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் கடைசியில் போட்டி திரில்லாக சென்றது. இதைத்தான் தோனி சுட்டிக்காட்டி வீரர்கள், தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றுள்ளார்.

Story first published: Thursday, April 22, 2021, 11:48 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
IPL 2021: Dhoni asks CSK players to be humble even after scoring big runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+