Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியில்லையே.. அதை பற்றி கேள்வி கேட்டதும்.. மொத்தமாக பேச்சை மாற்றிய தோனி.. அதிர்ச்சி!

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி இது குறித்து பேட்டி அளித்தார்.

Recommended Video

CSKவை தனியாளாக திணறடித்த தமிழக வீரர் ShahRukhan |oneindia Tamil

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. மும்பை பிட்சில் இந்த ஆட்டம் நடப்பதால், டாஸ் வென்றது சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடும். டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று பஞ்சாப்பிற்கு எதிராக ஆடுவார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் டாஸ் வென்ற தோனியிடம் சிஎஸ்கே அணியின் பவுலிங் குறித்து கேட்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் பவுலிங் கடந்த போட்டியில் மோசமாக இருந்ததே , இந்த போட்டியில் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா என்று கேட்கப்பட்டது. ஆனால் தோனி இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலாக பதில் சொன்னார.

தோனி பேட்டி

தோனி பேட்டி

தோனி அளித்த பேட்டியில், இன்று நாங்கள் நன்றாக பவுலிங் செய்வோம். ஒரு பவுலர் சூழ்நிலையை ஆராய்ந்து செயல்பட வேண்டும். கிரிக்கெட் என்பது மெண்டல் கேம். இதில் மனதைதான் அதிகம் பயன்படுத்த வேண்டும். இது மனம் சம்பந்தப்பட்டது. உடல் சம்பந்தப்பட்டது கிடையாது.

பழக்கம்

பழக்கம்

பிட்சுக்கு ஏற்றபடி தங்களை வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். இந்த பிட்ச் கொஞ்சம் டிரிக்காக இருக்கிறது. முதல் சில ஓவர்கள் மிக முக்கியமானதாக இருக்கும். பனி இப்போதே பெய்து வருகிறது. இரண்டாம் பாதியில் கண்டிப்பாக போட்டி மாறும், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

தோனி பேச்சு

தோனி பேச்சு

தோனி இந்த பேட்டியில் சிஎஸ்கே பவுலர்கள் சொதப்பியது குறித்து பேசவில்லை. அவர்கள் எப்படி தங்களை மாற்றிக்கொண்டு உள்ளனர், பவுலர்களை ஏன் சிஎஸ்கே மாற்றவில்லை, என்று தோனி எதுவுமே கூறவில்லை.

Story first published: Friday, April 16, 2021, 19:30 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+