Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமை விட்டு போறதுன்னா போங்க.. முக்கிய வீரருக்கு "ப்ரீ ஹேண்ட்".. தோனி முக்கிய முடிவு.. என்ன நடந்தது?

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர் ஒருவரை ராஜஸ்தான் அணிக்கு டிரான்ஸ்பர் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

Recommended Video

Dhoni கொடுத்த நம்பிக்கை Ruturaj Gaikwad செய்யும் தரமான சம்பவம் | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. தொடரின் தொடக்கத்தில் முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அதன்பின் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற்றது.

வரிசையாக தற்போது 5 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடருக்கான டிரான்ஸ்பர் விண்டோ பணிகள் தொடங்கி உள்ளன.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

அதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களை இன்னொரு அணிக்கு டிரான்ஸ்பர் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் ராஜஸ்தான் அணி டிரான்ஸ்பர் மூலம் பல வீரர்களை தங்கள் அணிக்கு கொண்டு வரும் திட்டத்தில் உள்ளது.

திட்டம்

திட்டம்

இதில் சிஎஸ்கே அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை கேட்கும் முடிவில் ராஜஸ்தான் இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. ஆனால் சிஎஸ்கே இன்னும் ராபின் உத்தப்பாவை டிரான்ஸ்பர் செய்யும் முடிவை எடுக்கவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

அதே சமயம் ராபின் உத்தப்பாவிற்கு ராஜஸ்தான் அணிக்கு செல்ல விருப்பம் இருந்தால் போகட்டும் என்று தோனி அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டத்தில் இருந்தால், உத்தப்பா ராஜஸ்தான் அணிக்கு செல்லலாம், அது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தோனி அனுமதி அளித்துள்ளார் என்கிறார்கள்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சிஎஸ்கே அணியில் ஒப்பனர்கள் முழு பார்மில் உள்ளனர். டாப் ஆர்டர் வீரர்களும் முழு பார்மில் உள்ளனர். இதனால் ராபின் உத்தப்பா அணி மாற விரும்பினால் மாறட்டும் என்ற முடிவில் தோனி இருப்பதாக கூறுகிறார்கள்.

உத்தப்பா

உத்தப்பா

உத்தப்பா சிஎஸ்கே அணிக்கு வந்த பின் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் 1000 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் இருந்தார். ஆனால் சிஎஸ்கே அணியில் அவருக்கு ஒரு போட்டியில் கூட இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 29, 2021, 14:49 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+