Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் சிறப்பான கம்பேக்கிற்கு பின்னால் இவ்வளவு நடந்துள்ளதா? உடைத்துக்கூறிய கேப்டன் தோனி..விவரம்

டெல்லி: சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மிகவும் மோசமாக ஆடியதற்கும் இந்தாண்டு சிறப்பாக ஆடுவதற்குமான காரணங்களை கேப்டன் தோனி அடுக்கியுள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு மோசமாக ஆடி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

குறிப்பாக சிஎஸ்கே வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக கடந்தாண்டு ப்ளே ஆஃப்-க்கு கூட செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

அசுர பலம்

அசுர பலம்

கடந்தாண்டு பெற்ற விமர்சனங்களுக்கு இந்தாண்டு சிஎஸ்கே அணி பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி முதல் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. அதன் பின்னர் ஆடிய 5 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிஎஸ்கே பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

 கடந்தாண்டு நினைவுகள்

கடந்தாண்டு நினைவுகள்

இந்நிலையில் கடந்தாண்டு மோசமான ஆண்டாக அமைந்ததற்கான காரணங்களை தோனி கூறியுள்ளார். எந்தவொரு தொடரின் தொடக்கத்திலும் ப்ளேயிங் 11ல் பிரச்னைகளை சந்திக்கக்கூடும். எவ்வளவு விரைவாக அதனை சரிசெய்கிறோமோ அவ்வளவு நல்லது. ஆனால் கடந்தாண்டு அது நடக்கவில்லை. அதே போல கடந்தாண்டு 5- 6 மாதங்கள் கொரோனாவால் வீரர்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே பயிற்சி இல்லாதது, தனிமைப்படுத்துதல் ஆகியவை முக்கிய காரணமாக இருந்தது.

 வீரர்களின் பொறுப்பு

வீரர்களின் பொறுப்பு

இந்த சீசனில் சிஎஸ்கேவீல் இருக்கும் வீரர்கள் கூடுதல் பொறுப்போடு விளையாடுகிறார்கள். கடந்த 8-10 வருடத்தில் எங்கள் அணியில் நாங்கள் பெரிதாக எந்த வீரர்களையும் மாற்றவில்லை. அதனால் சிஎஸ்கேவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என சக வீரகள் புரிந்துவைத்திருந்தனர். இந்த வருடம் எல்லாம் சிறப்பாக இருகிறது.

அணியின் ஒற்றுமை

அணியின் ஒற்றுமை

அதேபோல் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உட்கார வைக்கும் வீரர்களுக்கும் பெரிய பாராட்டுகளை தெரிவிப்போம். வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் சகஜமாக பேசுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது எப்படி ஆட வேண்டும் என்பதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் சிஎஸ்கே சிறப்பாக உள்ளதாக தோனி தெரிவித்தார்.

Story first published: Thursday, April 29, 2021, 23:36 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+