Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்ளோ சொல்லி அனுப்பியும் கேட்கல.. சிஎஸ்கே வீரர்களின் தெனாவட்டு.. கடுப்பில் தோனி எடுத்த அதிரடி முடிவு

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அட்வைஸையும் மீறி வீரர்கள் செய்த தவறால் சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே சிக்கலில் சிக்கியது.

ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக பண்ட் விளக்கம் அளித்தார்.

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி பண்ட்-ன் விளக்கத்தை பொய்யாக்கும் வகையில் அதிரடியாக தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 16 ரன்களை விளாசியது. ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் அதிரடி காட்டினர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் டூப்ளசிஸ் சிக்ஸர் அடிக்க முயன்ற போது சுலபமான கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சரிந்த சிஎஸ்கே விக்கெட்கள்

சரிந்த சிஎஸ்கே விக்கெட்கள்

இதன் பிறகாவது சிஎஸ்கேவின் வேகம் குறையும் என்று பார்த்தால் ருதுராஜ் அடித்தால் பவுண்டரி தான் அடிப்பேன் என விளையாடினார். ஆனால் நார்ட்ஜே வீச்ய பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு வந்த வீரர்களாவது நிதானமாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற மொயீன் அலி 5 ரன்களுக்கு வெகு சீக்கிரமாகவே வெளியேறினார்.

கடும் பிரஷர்

கடும் பிரஷர்

இதனால் சிஎஸ்கே அணியின் மீது அழுத்தம் அதிகரித்தது. சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ராபின் உத்தப்பா பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். அஸ்வின் வீசிய கேரம் பாலை, தவறான ஷாட்டாக அடிக்க முயன்று 18 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் சிஎஸ்கே 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

வீரர்களின் தெனாவட்டு

வீரர்களின் தெனாவட்டு

துபாய் களம் பேட்டிங்கிற்கு சற்று கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில போட்டிகளில் இங்கு 2வதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தோனி அப்படி சிந்திக்கவில்லை. போட்டிக்கு முன்னதாக, வீரர்களிடம், " அவசரப்பட்டு அதிரடி காட்டாதீர்கள், துபாய் களத்தில் கேப்பை பார்த்துதான் பவுண்டரி அடிக்க வேண்டுமே தவிர சிக்ஸர்களுக்கு அதிகம் முயற்சிக்க கூடாது என அட்வைஸ் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதனை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாத வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்துள்ளனர்.

கோபமடைந்த தோனி

கோபமடைந்த தோனி

இதனால் கடுப்பான தோனி, இனி யாரையும் நம்பி உபயோகம் இல்லை என நினைத்து தானே நேரடியாக 4வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். அம்பத்தி ராயுடுவடன் ஜோடி சேர்ந்த தோனி, நிதானமாக ரன்களை அதிகரித்து வருகிறார். ப்ளே ஆஃப்-க்கு தகுதிப்பெறும் வரை பொறுப்புடன் ஆடி வந்த சிஎஸ்கே வீரர்கள், தற்போது உற்சாகத்தில் தவறுகளை செய்துவருகின்றனர். எனவே இன்றைய போட்டிக்கு பிறகு அனைவருக்கும் தோனி ஸ்பெஷல் வகுப்பு ஒன்று நடத்துவார் என கூறப்படுகிறது.

Story first published: Monday, October 4, 2021, 21:03 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+