Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எடுத்த மிக முக்கிய முடிவு.. ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. விண்டேஜ் ஷாட்ஸ் ரெடி!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி ரசிகர்களுக்கு பிடித்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தமுள்ள 31 போட்டிகளை 27 நாட்களில் நடத்தவிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

கடந்தாண்டு படு சொதப்பலாக விளையாடிய சிஎஸ்கே அணி இந்தாண்டு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. அந்த அணியை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் தோனியின் பேட்டிங் ஃபார்ம் மட்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37 ரன்களை மாறுமே அடித்துள்ளார்.

சொதப்பலுக்கான காரணம்

சொதப்பலுக்கான காரணம்

தோனியின் இந்த சொதப்பலான ஆட்டத்திற்கு காரணம் அவர் களமிறங்கும் இடம் பேட்டிங் பொஷிசன் சரியாக இல்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். வழக்கமாக 4வது விக்கெட்டிற்கு களமிறங்கி வந்த தோனி கடந்த 2 வருடங்களாக 7வது வீரராக களமிறங்கி வருகிறார். குறிப்பாக தோனிக்கு முன்பாக ஜடேஜா களமிறக்கப்படுகிறார்.

ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

கிட்டத்தட்ட ஆட்டத்தின் 18வது ஓவரில் களமிறங்கும் தோனி கடுமையான பிரஷருக்கு ஆளாகிறார். வந்த உடனேயே அதிரடி காட்ட வேண்டும் என்பதால் அவர் சிக்ஸர் அடிப்பதற்கு சிரமங்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவர் லோயர் ஆர்டரில் விளையாடுகிறார். எனவே அவர் பேட்டிங் வரிசையில் முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வந்தனர்.

தோனி தந்த சர்ஃப்ரைஸ்

தோனி தந்த சர்ஃப்ரைஸ்

இந்நிலையில் அந்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய போட்டியில் முன்கூட்டியே களமிறங்க தோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மீண்டும் தனது பழைய அதிரடியை காட்டுவதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியை பார்த்து சிஎஸ்கே அணி பயிற்சியாளர்களே ஆச்சரியமடைந்துள்ளனர்.

இரவு 1 மணிக்கு கூட பயிற்சி

இரவு 1 மணிக்கு கூட பயிற்சி

அமீரகத்தில் சென்னை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. அதில் தோனி சிக்ஸருக்கு மட்டுமே படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவர் இரவு 1 மணி அளவில் கூட சிக்ஸர் அடித்து பயிற்சி மேற்கொண்டதாக அணித்தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இரண்டாம் பாதி தொடரில் தோனியின் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 19, 2021, 18:06 [IST]
Other articles published on Sep 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+