Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பண்ட்-காக பலகட்ட ஸ்கெட்ச்'.. நம்ம தோனியின் திட்டங்களே சொதப்பியது.. இறுதியில் ட்விஸ்ட் கொடுத்த ஜடேஜா

துபாய்: டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-ன் விக்கெட்டை எடுக்க தோனி பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 137 ரன்களை சேர்த்தது.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

சென்னை அணியில் ஓப்பனிங் வீரர்கள் 13 (13), டூப்ளசிஸ் 10 (8) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களுக்கும் நடையை கட்டினர். மறுமுணையில் நிதானமாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு ஒற்றை ஆளாக போராடி அணியை மீட்டார். 43 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் என 55 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது.

சுலபமான இலக்கு

சுலபமான இலக்கு

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கமே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இளம் வீரர் பிரித்வி ஷா 12 பந்துகளில் 18 ரன்களை விளாசி அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் துரதிஷ்டவசமாக 2 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுணையில் ஷிகர் தவான் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அந்த அணி 6 ஓவர்களுக்குள் 50 ரன்களை கடந்தது.

கேப்டன் பண்ட்

கேப்டன் பண்ட்

டெல்லி அணி வலுவான சூழலில் இருந்தபோது கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவரை சமாளிக்க முடியாது என்பதால் முன்கூட்டியே அவருக்காக ஸ்பெஷல் ஸ்கெட்ச் போட்டார் எம்.எஸ்.தோனி. பண்ட் சந்தித்த முதல் பந்தையே லெக் டவுன் திசையில் வீசினார் ஹாசல்வுட். அந்த பந்து பண்ட்-ன் பேட்டில் பட்டு தோனி கேட்ச் பிடித்த சத்தம் கேட்டது. அதற்கு தோனியும் ரிவ்யூவ் கேட்டார். ஆனால் பேட்டில் படவில்லை என நிராகரிக்கப்பட்டது.

தோனியின் ஸ்கெட்ச்

தோனியின் ஸ்கெட்ச்

இதனால் ரிஷப் பண்ட்-ன் கதையை முடிக்க ஸ்பின்னர்களை கொண்டு வந்தார் தோனி. 9வது ஓவரில் ஜடேஜாவிடம் சிக்னல் கொடுத்த தோனி, வைடு பந்தாக வீச சொன்னார். அதற்கேற்றார் போலவே ரிஷப் பண்ட் இறங்கி சிக்ஸ் அடிக்க முயன்ற போது, வைடு பந்தாக ஜடேஜா போட்டார். அதனை தோனி ஸ்டம்பிங் செய்தார். ஆனால் அதற்குள்ளாக ரிஷப் பண்ட் கிறீஸுக்குள் வந்துவிட்டதால் அந்த ப்ளான் சொதப்பியது.

இறுதியில் விக்கெட்

இறுதியில் விக்கெட்

ஆனால் அதே ஓவரில் அடுத்த ஸ்கெட்சில் சிக்கினார் அவர். 5வது பந்தை ஜடேஜா 107. 1 கிமீ வேகத்தில் நன்கு குத்திப்போட்டார். அதனை தூக்கி அடிக்க ரிஷப் பண்ட் முயன்ற போது பேட்டில் எட்ஜாகி ஈசியான கேட்ச்சாக மாறியது. பண்ட் மிகவும் ஆபத்தான வீரர் என்பதால் பல கட்ட திட்டங்களை வகுத்த தோனி, இறுதியில் வெற்றி பெற்றார். எனினும் பண்ட் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி சென்றார். 12 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 15 ரன்களை சேர்த்துக்கொடுத்து சென்றார்.

Story first published: Monday, October 4, 2021, 22:46 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+